

லாஸ்வேகாஸ்: யு-23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கிரகோ-ரோமன் 55 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வஜித், ஜார்ஜியாவின் கோபா கரு மிட்ஷியை எதிர்த்து விளையாடினார்.
இதில் விஸ்வஜித் 12-13 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் யு-23 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விஸ்வஜித் பெற்றார்.