விராட் கோலி, ரிஷப் பந்த் அரை சதம்: 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை தோற்கடித்த டெல்லி

விராட் கோலி, ரிஷப் பந்த் அரை சதம்: 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை தோற்கடித்த டெல்லி
Updated on
1 min read

பெங்களூரு: விஜய் ஹசாரே கோப்​பைக்​கான கிரிக்​கெட் போட்​டி​யில் டெல்லி அணி 7 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் குஜ​ராத்தை வீழ்த்​தி​யது. டெல்லி வீரர்​கள் ரிஷப் பந்த், விராட் கோலி ஆகியோர் சிறப்​பாக விளை​யாடி அரை சதம் விளாசினர்.

பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ மைதானத்​தில் டெல்​லி, குஜ​ராத் அணி​கள் நேற்று மோதின. இதில் முதலில் விளை​யாடிய டெல்லி அணி 50 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 254 ரன்​கள் எடுத்​தது. டெல்லி அணி​யில் இடம்​பெற்​றுள்ள இந்​திய அணி​யின் நட்​சத்​திர வீரர் விராட் கோலி 61 பந்​துகளில் 77 ரன்​கள் குவித்து விஷால் ஜெய்​ஸ்​வால் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். அவரது ஸ்கோரில் ஒரு சிக்​ஸர், 13 பவுண்​டரி​கள் அடங்​கும்.

டெல்லி அணி​யின் கேப்​டன் ரிஷப் பந்த் 79 பந்​துகளில் 70 ரன்​களைச் சேர்த்​தார். ஹர்ஷ் தியாகி 40 ரன்​களும் சிமர்​ஜீத் சிங் 15 ரன்​களும் சேர்த்​தனர்.

குஜ​ராத் அணி​யின் விஷால் ஜெய்​ஸ்​வால் 4 விக்​கெட்​களை​யும், ரவி பிஷ்னோய் 2 விக்​கெட்​களை​யும், சிந்​தன் கஜா, நாக்​வாஸ்​வாலா தலா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர்.

பின்​னர், 255 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய குஜ​ராத் அணி 47.4 ஓவர்​களில் 247 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து டெல்லி அணி 7 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டது.

குஜ​ராத் அணி சார்​பில் ஆர்ய தேசாய் 57, உர்​வில் படேல் 31, அபிஷேக் தேசாய் 26, சவுரவ் சவு​கான் 49, ஹேமங் படேல் 10, விஷால் ஜெய்​ஸ்​வால் 26 ரன்​கள் சேர்த்​தனர்.

டெல்லி அணி சார்​பில் பிரின்ஸ் யாதவ் 3, அர்ப்​பித் ராணா, இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2, நவ்​தீப் சைனி, சிமர்​ஜீத் சிங் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டைச்​ சாய்​த்​தனர்​.

விராட் கோலி, ரிஷப் பந்த் அரை சதம்: 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை தோற்கடித்த டெல்லி
விரைவாக 16 ஆயிரம் ரன்கள் குவித்து விராட் கோலி சாதனை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in