விரைவாக 16 ஆயிரம் ரன்கள் குவித்து விராட் கோலி சாதனை!

விரைவாக 16 ஆயிரம் ரன்கள் குவித்து விராட் கோலி சாதனை!
Updated on
1 min read

பெங்களூரு: விஜய் ஹசாரே ஒரு​நாள் போட்​டித் தொடரில் நேற்று பெங்​களூரு​வில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் டெல்லி - ஆந்​திரா அணி​கள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆந்​திரா அணி 50 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 298 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக ரிக்கி புயி 105 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 11 பவுண்​டரி​களு​டன் 122 ரன்​கள் விளாசி​னார். டெல்லி அணி தரப்​பில் சிமர்​ஜீத் சிங் 5, பிரின்ஸ் யாதவ் 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

299 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த டெல்லி அணி 37.4 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 300 ரன்​கள் எடுத்து 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்​திய அணி​யின் சீனியர் நட்​சத்​திர பேட்​ஸ்​மே​னான விராட் கோலி 101 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 14 பவுண்​டரி​களு​டன் 131 ரன்​கள் விளாசி​னார். நிதிஷ் ராணா 55 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 77 ரன்​களும், பிரியன்ஷ் ஆர்யா 44 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 74 ரன்​களும் சேர்த்​தனர். கேப்​டன் ரிஷப் பந்த் 5 ரன்​களில் ஆட்​ட​மிழந்து ஏமாற்​றம் அளித்​தார்.

15 ஆண்​டு​களுக்கு பிறகு விஜய் ஹசாரே போட்​டி​யில் களமிறங்​கிய விராட் கோலி ஆந்​திர அணிக்கு எதி​ராக 131 ரன்​கள் எடுத்​தன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்​கெட்​டில் அதிவேக​மாக 16 ஆயிரம் ரன்​களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்​தார். தனது 330-வது இன்​னிங்​ஸில் விராட் கோலி இந்த சாதனையைப் படைத்​துள்​ளார். இதற்கு முன்​னர் இந்​திய அணி​யின் முன்​னாள் வீரர் சச்​சின் டெண்​டுல்​கர் லிஸ்ட் ஏ கிரிக்​கெட்​டில் 391 இன்​னிங்​ஸ்​களில் 16 ஆயிரம் ரன்​களைக் கடந்​திருந்​ததே சாதனை​யாக இருந்​தது. அந்த சாதனையை விராட் கோலி தற்​போது முறியடித்​துள்​ளார்.

லிஸ்ட் ஏ கிரிக்​கெட்​டில் 16 ஆயிரம் ரன்​களை விரை​வாக குவித்த வீரர்​களின் பட்​டியலில் டாப் 5-ல் இந்​திய வீரர்​களில் விராட் கோலி​யும், சச்​சின் டெண்​டுல்​கர் மட்​டுமே உள்​ளனர். இவர்​களுக்கு அடுத்​த​படி​யாக கார்​டன் கிரீனிட்ஜ் (422 இன்​னிங்​ஸ்​கள்), ரிக்கி பாண்​டிங் (430), கிர​காம் கூச் (435), வி​வியன் ரிச்​சர்ட்​ஸ்​ (435) ஆகியோர்​ உள்​ளனர்​.விஜய் ஹசாரே ஒருநாள் போட்டித் தொடரில் ஆந்திரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய விராட் கோலி.

விரைவாக 16 ஆயிரம் ரன்கள் குவித்து விராட் கோலி சாதனை!
கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in