“பாலியல் சுரண்டலால் பாதிக்கப்பட்ட 6 பேரில் நானும் அடங்குவேன்” - பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக வினேஷ் போகத் மீண்டும் புகார்

வினேஷ் போகத்

வினேஷ் போகத்

Updated on
1 min read

புதுடெல்லி: ​தேசிய மல்​யுத்த சம்​மேளனத்​தில் பாஜக மூத்த தலைவரும், எம்​.பி.​யு​மான பிரிஜ் பூஷண் சிங் தலை​வ​ராக இருந்​த​போது பலமல்​யுத்த வீராங்​க​னை​களுக்கு பாலியல் தொல்லை அளித்​த​தாக​வும், புகார் அளித்​தும் அவர்மீது எந்த நடவடிக்​கை​யும் எடுக்கவில்லை என்​றும் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்​கள் கடந்த 2023-ம் ஆண்டு டெல்​லி​யில் போராட்​டம் நடத்​தினர்.

அதன் பின்​னர் பிரிஜ் பூஷண் சிங் பதவி நீக்​கம் செய்​யப்​பட்​டார். அவர் மீதான கிரிமினல் வழக்கு நிலு​வை​யில் உள்​ளது. இந்நிலையில் பிரிஜ் பூஷண் சிங் மீது மீண்​டும் பாலியல் புகார் குற்​றச்​சாட்டை வினேஷ் போகத் வைத்​துள்​ளார்.

இது தொடர்​பாக சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்​டுள்ள வீடியோ​வில் வினேஷ் போகத் கூறிய​தாவது: பிரிஜ் பூஷனுக்கு எதிரான வழக்கு இன்​னும் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது. சாட்​சிய விசா​ரணை​கள் தொடர்ந்து நடை​பெற்று வரு​கின்​றன. எனது அடை​யாளத்தை வெளி​யிட வேண்​டாம் என்​றும், சட்​ட ரீதியான நடவடிக்​கைகள் தொடர அனு​ம​திக்க விரும்​புவ​தாக​வும் முன்​னரே நான் முடிவு செய்​திருந்​தேன். பாதிக்​கப்​பட்​ட​வரின் கண்ணி​யம் மற்​றும் கவுர​வம் சம்​பந்​தப்​பட்ட விஷ​யம் என்​ப​தால், அவரது அடை​யாளத்தை வெளி​யிடக்​ கூ​டாது என உச்ச நீதி​மன்ற வழி​காட்​டு​தல்​கள் கூறுகின்​றன.

ஆனால் இன்​று, சில சூழ்​நிலைகளின் காரண​மாக, நான் உங்கள் அனை​வருக்​கும் ஒன்​றைச் சொல்ல விரும்​பு​கிறேன். வழக்கு இன்னும் நிலு​வை​யில் இருக்​கும்​போது நான் பேச விரும்​ப​வில்​லை. ஆனால், புகார் அளித்த அந்த ஆறு பாதிக்​கப்​பட்ட பெண்​களில் நானும் ஒரு​வள் என்​ப​தை​யும், எங்​கள் சாட்​சி​யங்​கள் இன்​னும் நடந்​து​ கொண்​டிருக்​கின்றன என்​ப​தை​யும் நான் கூற விரும்புகிறேன். பிரிஜ் பூஷணுக்கு எதி​ராக புகார் அளித்த 6 மல்யுத்த வீராங்​க​னை​களில் நானும் ஒரு​வள்.

கோண்​டா​வில் நடை​பெறவுள்ள தேசிய திறந்​தநிலை தரவரிசைப் போட்​டி​யின் போது எனக்கோ அல்​லது எனது அணிக்கோ ஏதேனும் நேர்ந்​தால், அதற்கு மத்​திய அரசே பொறுப்​பேற்க வேண்​டும். ஏனெனில் போட்டி நடை​பெறும் கோண்டா நகரம், பிரிஜ் பூஷணுக்கு தொடர்​புடைய நகர​மாகும். போட்​டி​யின் போது எனக்கோ, எனது அணிக்கோ அல்​லது ஆதர​வாளர்​களுக்கோ ஏதேனும் விரும்​பத்​த​காத சம்​பவம் நடந்​தால், அதற்​கு அரசே பொறுப்​பேற்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தா​ர்​.

<div class="paragraphs"><p><em>வினேஷ் போகத்</em></p></div>
Tamil Nadu Election Results 2026 LIVE: தவெக முன்னிலை, 2-ம் இடத்தில் அதிமுக, திமுகவுக்கு 3-ம் இடம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in