

ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் லீக் போட்டியில் மகாராஷ்டிர அணி 129 ரன்கள் வித்தியாசத்தில் உத்தராகண்ட் அணியை வீழ்த்தியது.
ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் மகாராஷ்டிர அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் எடுத்தது. மகாராஷ்டிர அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 113 பந்துகளில் 124 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய உத்தராகண்ட் அணி 43.3 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அகர்வால், படிக்கல் சதம்: அகமதாபாத்தில் நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் கர்நாடக அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் புதுச்சேரி அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய கர்நாடக அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் குவித்தது.
மயங்க் அகர்வால் 132 ரன்களும், தேவ்தத் படிக்கல் 113 ரன்களும் குவித்தனர். கருண் நாயர் ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் சேர்த்தார். பின்னர் விளையாடிய புதுச்சேரி அணி 50 ஓவர்களில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
புதுச்சேரி அணியின் நெயன் ஷியாம் காங்கயன் 68, ஜெயந்த் யாதவ் 54 ரன்கள் சேர்த்தனர். கர்நாடக அணியின் மன்வந்த் குமார் 3, வித்வத் காவேரப்பா, கருண் நாயர் ஆகியோர் தலா 2, அபிலாஷ் ஷெட்டி, ஸ்ரீர்ஷா ஆச்சார், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.