துருவ் ஜூரெல் சதம்: உ.பி. அணி அபார வெற்றி!

துருவ் ஜூரெல் சதம்: உ.பி. அணி அபார வெற்றி!
Updated on
1 min read

ராஜ்கோட்: விஜய் ஹசாரே கோப்​பைக்​கான கிரிக்​கெட் லீக் போட்​டி​யில் உத்​தரபிரதேச அணி 54 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் பரோடா அணியை வீழ்த்​தி​யது. இந்​தப் போட்​டி​யில் உ.பி. அணி வீரர் துருவ் ஜூரெல் சதம் விளாசி​னார்.

ராஜ்கோட்​டிலுள்ள சமோசரா மைதானத்​தில் இந்​தப் போட்டி நேற்று நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய உ.பி. அணி 50 ஓவர்​களில் 7 விக்​கெட் இழப்​புக்கு 369 ரன்​கள் குவித்​தது. துருவ் ஜூரெல் 101 பந்​துகளில் 15 பவுண்​டரி​கள், 8 சிக்​ஸர்​களு​டன் 160 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். கோஸ்​வாமி 51, ஆர்​யன் ஜுயால் 26, கேப்​டன் ரிங்கு சிங் 63, பிர​சாந்த் வீர் 35 ரன்​கள் குவித்​தனர். பரோடா அணி​யின் ராஜ் லிம்​பானி 4 விக்​கெட்​களைச் சாய்த்​தார்.

பின்​னர் விளை​யாடிய பரோடா அணி 50 ஓவர்​களில் 315 ரன்​களுக்கு அனைத்து விக்​கெட்​களை​யும் இழந்து 54 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டது. அந்த அணி​யின் சஷ்வத் ரவாத் 60, சிவாலிக் சர்மா 30, கேப்​டன் கிருணல் பாண்​டியா 82, விஷ்ணு சோலங்கி 43, அதித் சேத் 46 எடுத்​தனர். உ.பி. அணி​யின் ஜீஷன் அன்​சாரி 3, சமீர் ரிஸ்​வி, விப்​ராஜ் நிகம் ஆகியோர் தலா 2, குணால் தியாகி, ரிங்கு சிங், பிர​சாந்த் வீர் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை வீழ்த்​தினர்​.

துருவ் ஜூரெல் சதம்: உ.பி. அணி அபார வெற்றி!
“ஆர்எஸ்எஸ் நினைப்பதை சீமான் பிரதிபலிக்கிறார்” - திருமாவளவன் விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in