

டெட்ராய்ட்: அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் உள்ள டெட்ராய்டில் டிஆர் 21 மோட்டார் சிட்டி ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதன் முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 46-வது இடத்தில் உள்ள இந்தியாவின் வேலவன் செந்தில் குமார், இங்கிலாந்தின் சாமுவேல் ஆஸ்போர்ன்-வைல்டுடன் மோதினார். இதில் வேலவன் செந்தில்குமார் 11-9, 11-5, 11-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு இந்திய வீரரான ரமித் டாண்டன் 11-8, 11-4, 8-11, 11-4 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் டாம் வால்ஸை தோற்கடித்தார்.