

சென்னை: சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ராமசந்திரா - வேலம்மாள் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வேலம்மாள் அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்தது. எஸ்.பி.சரண் 33 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார்.
105 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ராமசந்திரா அணி 14 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேலம்மாள் அணி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
மற்ற ஆட்டங்களில் எஸ்எஸ்என் கல்லூரி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெங்கடேஷ்வரா கல்லூரி அணியையும், ராஜலட்சுமி கல்லூரி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் பனிமலர் கல்லூரி அணியையும், சவீதா கல்லூரி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அண்ணா பல்கலைக்கழக அணியையும் தோற்கடித்தன. இன்று நடைபெறும் கால் இறுதி சுற்று ஆட்டங்களில் ஆர்எம்கே - வேலம்மாள், லயோலா - சவீதா, ராஜலட்சுமி - சத்யபாமா பல்கலைக்கழகம், எஸ்எஸ்என் - சாய்ராம் ஆகிய அணிகள் மோதுகின்றன.