171 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி - 234 ரன்களில் இந்தியா வெற்றி @ யு19 ஆசிய கோப்பை தொடர்

171 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி - 234 ரன்களில் இந்தியா வெற்றி @ யு19 ஆசிய கோப்பை தொடர்
Updated on
1 min read

துபாய்: நடப்பு யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணி உடனான ஆட்டத்தில் 234 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி 95 பந்துகளில் 171 ரன்கள் எடுத்தார்.

​யு19 ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடர் துபா​யில் இன்று தொடங்​​கயது. இதில் இந்​தியா உள்​ளிட்ட 8 அணி​கள் கலந்து கொண்டுள்ளன. இவை 2 பிரிவு​களாக பிரிக்கப்பட்​டுள்​ளன. இந்​திய அணி ‘ஏ’ பிரி​வில் இடம்பெற்றுள்ளது. இதே பிரி​வில் மலேசி​யா, பாகிஸ்​தான், ஐக்​கிய அரபு அமீரகம் அணி​களும் உள்​ளன. இந்​திய அணி இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இன்று ஐக்​கிய அரபு அமீரக (யுஏஇ) அணியுடன் விளையாடியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 433 ரன்கள் எடுத்தது. வைபவ் சூர்யவன்ஷி, 95 பந்துகளில் 171 ரன்கள் எடுத்தார். இதில் 14 சிக்ஸர்களை அவர் விளாசினார். விஹான் மல்ஹோத்ரா மற்றும் ஆரோன் ஜார்ஜ் ஆகியோர் தலா 69 ரன்கள் எடுத்தனர். இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் இது ஒரு அணி பதிவு செய்த அதிகபட்ச ரன்களாக அமைந்தது.

434 ரன்கள் இலக்கை விரட்டிய ஐக்கிய அரபு அமீரக அணி, 50 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 234 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது.

கடந்த 2002-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக இளையோர் கிரிக்கெட்டில் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு 177 ரன்கள் விளாசினார். இதுவே இந்த பிரிவில் இந்தியர் ஒருவர் பதிவு செய்த அதிகபட்ச ரன்களாக அமைந்தது. அவருக்கு அடுத்ததாக இந்திய வீரர் பதிவு செய்த அதிகபட்ச ரன்களாக வைபவ் சூர்யவன்ஷியின் 171 ரன்கள் அமைந்துள்ளது.

171 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி - 234 ரன்களில் இந்தியா வெற்றி @ யு19 ஆசிய கோப்பை தொடர்
இந்திய டி20 அணியில் ஆட்டம் காணும் சூரியகுமார் யாதவின் இடம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in