37 பந்துகளில் 103 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி

37 பந்துகளில் 103 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணிக்​கெ​தி​ரான ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்​ய​வன்ஷி 37 பந்​துகளில் 103 ரன்​கள் விளாசி​னார்.

இந்த ஆட்​டம் ஜெய்ப்​பூர் சவாய் மான்​சிங் மைதானத்​தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய ராஜஸ்​தான் அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட் இழப்​புக்கு 228 ரன்​கள் குவித்தது.

தொடக்க வீர​ராக களமிறங்​கிய யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 10, துருவ் ஜூரெல் 51, ரியான் பராக் 7, டோனவன் பெரைரா 33, ஷிம்​ரன் ஹெட்​மயர் 11 ரன்​கள் எடுத்​தனர்.

அதிரடி வீரர் வைபவ் சூர்​ய​வன்ஷி 37 பந்​துகளில் 5 பவுண்​டரி​கள், 12 சிக்​ஸர்​களு​டன் 103 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தார். ரவீந்​திர ஜடேஜா 4 ரன்​களும், ஜோப்ரா ஆர்ச்​சர் 2 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். பின்​னர் 229 ரன்​கள் வெற்றி என்ற இலக்​குடன் பேட்​டிங் செய்த ஹைத​ரா​பாத் அணி, 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

37 பந்துகளில் 103 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி
தமிழ்​நாடு யு-20 கால்​பந்து அணிக்கு நிதி மறுப்பு: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தலை​யிட கோரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in