மீண்டும் சதத்தை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி: ராஜஸ்தான் 214 ரன்கள் குவிப்பு - IPL Qualifier 2

வைபவ் சூர்யவன்ஷி

வைபவ் சூர்யவன்ஷி

Updated on
1 min read

முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 96 ரன்கள் எடுத்தார் ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இந்த ஆட்டத்தில் ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இந்த ஆட்டம் நியூ சண்டிகரில் உள்ள முலான்போர் மைதானத்தில் நடைபெற்ற வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி டாஸ் வென்று, பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். முதல் ஓவரில் ஜெய்ஸ்வால், இரண்டாவது ஓவரில் துருவ் ஜுரெல் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

9 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்திருந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்காக பேட் செய்ய களத்துக்கு வந்தார் ஜடேஜா. இருவரும் இணைந்து இன்னிங்ஸை கட்டமைத்தனர். 8 ஓவர்களில் 82 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான். அப்போது 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தார் ஜடேஜா. அந்நிலையில், ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் அவர் வெளியேறினார்.

தொடர்ந்து களத்துக்கு வந்த ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷனகா 3, ஆர்ச்சர் 7 ரன்களில் வெளியேறினர். பின்னர் மீண்டும் களத்துக்கு வந்தார் ஜடேஜா. மறுமுனையில் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார். 47 பந்துகளில் 96 ரன்கள் சேர்த்து அவர் ஆட்டமிழந்தார். 8 ஃபோர்கள் மற்றும் 7 சிக்ஸர்களை அவர் விளாசினார். தொடர்ந்து இரண்டாவது முறையாக சதம் விளாசும் வாய்ப்பை வைபவ் சூர்யவன்ஷி தவறவிட்டுள்ளார். இந்த சீசனில் 90+ ரன்களில் அவர் மூன்று முறை ஆட்டமிழந்துள்ளார்.

இறுதி கட்டத்தில் டோனவன் ஃபெரேரா அதிரடியாக ஆடி தனது பவர் ஹிட்டிங்கை வெளிப்படுத்தினார். அவர் 11 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். ஜடேஜா, 35 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான் அணி. இந்த ஆட்டத்தில் குஜராத் வெற்றி பெற 215 ரன்கள் தேவை.

<div class="paragraphs"><p>வைபவ் சூர்யவன்ஷி</p></div>
“கர்நாடக அமைச்சரவையில் 50% புதுமுகங்களுக்கு வாய்ப்பு” - காங். கொறடா தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in