

மும்பை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) 7-வது சீசன் போட்டிகள் வரும் ஜூலை 9-ம் தேதி கோவாவில் தொடங்குகின்றன. இம்முறை 7 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.
இந்நிலையில் இந்த தொடருக்கான வீரர், வீராங்கனைகள் ஏலம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் ருமேனியா வீராங்கனையான பெர்னாடெட் ஸோக்ஸை 40 லட்சம் டோக்கன்களுக்கு டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணி ஏலம் எடுத்தது.
இந்தியாவின் முன்னணி வீராங்கனையான தியா சித்தலேவை 37.4 லட்சம் டோக்கன்களுக்கு பிபிஜி புனே ஜாக்குவார்ஸ் அணி வாங்கியது. இந்தியாவின் முன்னணி வீரரான மனுஷ் ஷாவை 37.2 லட்சம் டோக்கன்களுக்கு யு மும்பா அணி ஏலம் எடுத்தது. அதேவேளையில் மானவ் தாக்கரை 36 லட்சம் டோக்கன்களுக்கும் ஆஸ்திரேலியாவின் யங்ஸி லியுவைவை 32 லட்சம் டோக்கன்களுக்கும் யுபி புரோமிதியன்ஸ் அணி வாங்கியது.