அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜிவேரேவ், ரைபகினா கால் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி
இகா ஸ்வியாடெக்

இகா ஸ்வியாடெக்

Updated on
2 min read

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீர​ரான ஜெர்​மனி​யின் அலெக்​ஸாண்​டர் ஜிவேரேவ், 2-ம் நிலை வீராங்​க​னை​யான கஜகஸ்​தானின் எலெனா ரைபகினா உள்ளிட்டோர் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினர்.

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரின் 9-வது நாளான நேற்று முன்​தினம் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் முதல் நிலை வீர​ரான ஜெர்​மனி​யின் அலெக்​ஸாண்​டர் ஜிவேரேவ், 21-ம் நிலை வீர​ரான இத்​தாலி​யின் லுச்​சி​யானோ டார்​டெரியை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் ஜிவேரேவ் 6-2, 6-2, 7-6 (7-3) என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

70-ம் நிலை வீர​ரான நெதர்​லாந்​தின் போடிக் வான் டி ஜாண்ட்​ஷல்ப், 87-ம் நிலை வீர​ரான பிரான்​ஸின் ஆர்​தர் கியாவை எதிர்த்து விளை​யா​னார். சுமார் 5 மணி நேரம் 13 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த போராட்​டத்​தில் போடிக் வான் டி ஜாண்ட்​ஷல் 3-6, 6-7 (0-7), 7-6 (9-7), 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றில் கால்​ப​தித்​தார். அமெரிக்க ஓபன் வரலாற்​றில் நீண்ட நேரம் நடை​பெற்ற 4-வது ஆட்​ட​மாக இது அமைந்​தது.

2022-ம் ஆண்டு 2-வது இடத்​தைப் பிடித்த நார்​வே​யின் காஸ்​பர் ரூட் முதுகு​வலி​யால் கடைசி நேரத்​தில் போட்​டி​யில் இருந்து வில​கி​யிருந்​தார். இதனால் அவரது இடத்​துக்கு தகுதி சுற்​றின் இறுதி சுற்​றில் தோல்வி அடைந்த (‘லக்கி லூசர்’ - தகு​திச்​சுற்​றின் இறு​திச் சுற்​றில் தோற்​று, மற்​றொரு வீரர் வில​கும்​போது பிர​தான சுற்​றில் நுழை​யும் வீரர்) பிரான்ஸ் வீர​ரான ஆர்​தர் கியா தேர்​வாகி இருந்​தார்.

தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர், சரி​யாக பயன்​படுத்​திக் கொண்டு கால் இறுதி சுற்​றில் கால்​ப​தித்​துள்​ளார். இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் தொடர்​களில் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறிய முதல் ‘லக்கி லூசர்’ என்ற பெரு​மையை பெற்​றுள்​ளார் ஆர்​தர் கியா. 50-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் கரேன் கச்​சனோவ் 7-5, 4-6, 6-7 (6-8), 6-1, 6-4 என்ற செட் கணக்​கில் 14-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் லர்​னர் டியனை வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

இந்த ஆட்​டம் 3 மணி நேரம் 50 நிமிடங்​கள் நடை​பெற்​றது. மற்​றொரு ஆட்​டத்​தில் 28-ம் நிலை வீர​ரான பெல்​ஜி​யத்​தின் அலெக்​ஸாண்​டர் பிளாக் 6-3, 4-6, 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்​கில் 24-ம் நிலை வீர​ரான அர்​ஜெண்​டி​னா​வின் பிரான்​சிஸ்கோ செருண்​டோலோவை தோற்​கடித்து கால் இறுதி சுற்​றில் நுழைந்​தார். இதன் மூலம் அமெரிக்க ஓபன் வரலாற்​றில் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறிய முதல் பெல்​ஜி​யம் வீரர் என்ற பெரு​மையை பெற்​றார் அலெக்​ஸாண்​டர் பிளாக்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் 2-ம் நிலை வீராங்​க​னை​யான கஜகஸ்​தானின் எலெனா ரைபகி​னா, 13-ம் நிலை வீராங்​க​னை​யான ஜப்​பானின் நவோமி ஒசா​காவை எதிர்​கொண்​டார். இதில் ரைபகினா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றில் கால் பதித்​தார். கால் இறுதி சுற்​றில் ரைபகி​னா, சீனா​வின் ஜெங் கின்​வென்​னுடன் மோதுகிறார். இதில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்​றுக்கு ரைபகினா முன்​னேறும் பட்​சத்​தில் டென்​னிஸ் தரவரிசை​யில் பெலாரஸின் அரினா சபலென்​காவை பின்​னுக்​குத்​தள்ளி முதலிடத்தை கைப்​பற்ற வாய்ப்பு உள்ளது.

ஒரு​வேளை ரைபகினா கால் இறுதி சுற்​றில் தோல்வி அடைந்தாலும் கூட, சபலென்​கா, கோ கோ காஃப் அல்​லது ஜெசிகா பெகுலா ஆகியோரில் யாரும் ஒரு​வர் பட்​டத்தை வெல்லவில்லை என்​றால், ரைபகினா முதலிடத்​துக்கு முன்​னேற முடி​யும். தகுதி நிலை வீராங்​க​னை​யான ஜெங் கின்​வென் 4-வது சுற்று ஆட்​டத்​தில் 8-ம் நிலை வீராங்​க​னை​யான போலந்​தின் இகா ஸ்வி​யாடெக்கை 7-5, 6-3 என்ற் நேர் செட் கணக்​கில் அதிர்ச்சி அளிக்​கும் வகை​யில் தோற்​கடித்து கால் இறுதி சுற்​றுக்கு முன்னேறி​னார்.

இதன் மூலம் 2021-ம் ஆண்​டுக்கு பின்​னர் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறிய தகுதி நிலை வீராங்​கனை என்ற பெரு​மையை பெற்​றார் ஜெங் கின்​வென். இதற்கு முன்​னர் 2021-ல் இங்​கிலாந்​தின் எம்மா ரடு​கானு தகுதி நிலை வீராங்​க​னை​யாக கால் இறுதி சுற்​றில் கால்​ப​தித்து இருந்​தார். அவர், அந்​தத் தொடரில் சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்று சாதனையை​யும் நிகழ்த்தி இருந்​தார்.

5-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் மிர்ரா ஆண்ட்​ரிவா 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்​கில் 24-ம் நிலை வீராங்​க​னை​யான ஆஸ்​திரி​யா​வின் அனஸ்​டசியா பொட்​ட​போ​வாவை வீழ்த்தி கால் இறுதி சுற்​றில் நுழைந்​தார். கால் இறுதி சுற்​றில் மிர்ரா ஆண்ட்​ரிவா 4-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் கோ கோ காஃபுடன் பலப்​பரீட்சை நடத்த உள்​ளார். கோ கோ காஃப் 4-வது சுற்​றில் 6-1, 6-4 என்​ற நேர்​ செட்​ கணக்​கில்​ சகநாட்​டைச்​ சேர்ந்​த இவா ஜோகோவிக்​கை தோற்​கடித்​தார்​.

<div class="paragraphs"><p>இகா ஸ்வியாடெக்</p></div>
27 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in