யு-20 உலக தடகள சாம்பியன்ஷிப்: பசந்த் குமாருக்கு வெள்ளி

யு-20 உலக தடகள சாம்பியன்ஷிப்: பசந்த் குமாருக்கு வெள்ளி
Updated on
1 min read

புதுடெல்லி: உலக தடகளப் போட்​டி​யின் (20 வயதுக்​குட்​பட்​டோர்) உயரம் தாண்​டு​தல் பிரி​வில் இந்​திய வீரர் பசந்த் குமார் மேக்​வால் வெள்​ளிப் பதக்​கம் வென்​றார்.

அமெரிக்​கா​வின் ஓரே​கானில் உலக தடகள சாம்​பியன்​ஷிப் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற ஆடவர் உயரம் தாண்​டு​தல் போட்​டி​யில், இந்​திய இளம் வீரர் பசந்த் குமார் மேக்​வால் 2.21 மீட்​டர் உயரத்​தைத் தாண்டி 2-வது இடம் பிடித்​தார். இதையடுத்து அவர் வெள்ளி பதக்​கத்​தைத் தட்​டிச் சென்​றார்.

உலக தடகளப் போட்​டி​யின்​(​யு20) உயரம் தாண்​டு​தல் பிரி​வில் இந்​திய தடகள வீரர் ஒரு​வர் பெறும் முதல் வெள்​ளிப் பதக்​கம் இது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

பசந்த் குமார் மேக்​வால், ராஜஸ்​தான் மாநிலம் கங்​காநகர் மாவட்​டத்​தி​லுள்ள அனுப்​கர் பகு​தி​யைச் சேர்ந்​தவர். இதே பிரி​வில் அல்​ஜீரியா வீரர் யூனஸ் அயாச்சி தங்​கப் பதக்​கத்​தை​யும், பிரிட்​டன் வீரர் ஓட்​டிஸ் புலே வெண்​கலப் பதக்​கத்​தை​யும் வென்​றனர்.

நேற்று நடை​பெற்ற ஆடவர் நீளம் தாண்​டு​தல் பிரி​வில் இந்​திய வீரர் ஷான​வாஸ் கான் 7.84 மீட்​டர் தாண்டி 3-ம் இடம் பிடித்து வெண்​கலம் வென்​றார்.

யு-20 உலக தடகள சாம்பியன்ஷிப்: பசந்த் குமாருக்கு வெள்ளி
CWG 2026: பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in