

புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்தார்.
அண்மையில் கிளாஸ்கோவில் நடைபெற்ற 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 39 பதக்கங்களை வென்றது. இதையடுத்து நாடு திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று டெல்லியிலுள்ள பிரதமர் மோடி இல்லத்தில் அவரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதைத் தொடர்ந்து அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.