

துபாய்: யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சாம்பியன் பட்டத்தை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்திய அணி அரை இறுதியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியிருந்தது. அதேவேளையில் பாகிஸ்தான் அணி அரை இறுதியில் வங்கதேசத்தை தோற்கடித்து இருந்தது.
இந்திய அணியில் பேட்டிங்கில் வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ், விகான் மல்கோத்ரா, அபிக்யான் குண்டு, வேதாந்த் திரிவேதி ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி தரக்கூடும். இதேபோன்று இந்திய அணியின் பந்துவீச்சில் திபேஷ் தேவேந்திரன், உத்தவ் மோகன் ஆகியோர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கக்கூடும்.