

புதுடெல்லி: யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் வரும் டிசம்பர் 12 முதல் 21 வரை நடைபெறுகிறது. 50 ஓவர் வடிவிலான இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ் மாத்ரே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கு தயாராகும் வகையில் ஆசிய கோப்பை தொடரை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ளக்கூடும்.
இந்திய யு-19 அணி: ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குந்து, ஹர்வன்ஷ் சிங், யுவராஜ் கோகில், கன்ஷிக் சவுகான், ஹிலன் படேல், நமன் புஷ்பக், தீபேஷ், ஹனில் படேல், கிஷான் குமார் சிங், உத்தவ் மோகன், ஆரோன் ஜார்ஜ்.