

சிட்னி: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கேப்டன் பாட் கம்மின்ஸ் முதல் போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில் வரும் டிசம்பர் 4-ம் தேதி 2-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்குகிறது. இந்த போட்டி பிங்க் பால் போட்டியாக நடத்தப்பட உள்ளது.
இந்த ஆட்டத்துக்கான 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாட் கம்மின்ஸ் இடம் பெறவில்லை. முதல் போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜேக் வெதரால்டு, மார்னஸ் லபுஷேன், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரி, பியூ வெப்ஸ்டர், நேதன் லயன், ஸ்காட் போலண்ட், பிரெண்டன் டாகெட், மைக்கேல் நேசர், மிட்செல் ஸ்டார்க்.