இளம் மோட்டார் பைக் ரேஸிங் சாம்பியன்களை உருவாக்க டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பயிற்சி

இளம் மோட்டார் பைக் ரேஸிங் சாம்பியன்களை உருவாக்க டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பயிற்சி
Updated on
1 min read

சென்னை: அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள், டிவிஎஸ் ரேஸிங் சாம்பியன்களின் வழிகாட்டுதலின் கீழ், இளைஞர்கள் ரேஸிங் திறன்களை அதிகரிக்க டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பயிற்சி அளிக்கிறது.

இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் (பிரீமியம் பிஸினஸ்) விமல் சும்ப்ளி செய்தியாளர்களிடம் கூறியதாவது: டிவிஎஸ் அபாச்சி ஜூனியர் திட்டத்தின் கீழ் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இளம் வயதிலேயே மோட்டார் சைக்கிள் ரேஸிங் திறனைக் கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இத்திட்டம், மெட்ராஸ் இன்டர்நேஷனல் கார்ட்டிங் மைதானத்தில் வழங்கப்படுகிறது. இதற்காக சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் பிரத்யேக மைதானம் உருவாக்கப்படுகிறது. வழக்கமாக 18 வயதில்தான் ஓட்டுநர் உரிமம் பெற முடியும். ஆனால் இளம் ரேஸிங் சாம்பியன்களுக்காக 14 வயது முதல் ரேஸிங் ஓட்டுநர் உரிமத்தை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பெற்றுத்தருகிறது.

இந்தத் திட்டத்தின் தேர்ந்தெடுக்கப்படும் சிறுவர்கள் டிவிஎஸ் அபாச்சி ஆர்ஆர் 200 மினி மோட்டார் சைக்கிள்களில் பயிற்சி பெறுவர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இவை வாடகைக்குக் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியின்போது, இளம் சாம்பியன்கள் பயிற்சி பெற வசதியாக மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (எம்எம்எஸ்சி) நிர்வாகத்திடம் 10 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 200 மினி மோட்டார் சைக்கிள்களை டிவிஎஸ் நிறுவனம் வழங்கியது.

இளம் மோட்டார் பைக் ரேஸிங் சாம்பியன்களை உருவாக்க டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பயிற்சி
டி20 தரவரிசையில் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in