ஸ்பெயினில் சோகம்: கால்பந்தாட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் 30 வயது வீரர் உயிரிழப்பு

ஸ்பெயினில் சோகம்: கால்பந்தாட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் 30 வயது வீரர் உயிரிழப்பு
Updated on: 
1 min read

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் கால்பந்து ஆடுகளத்தில் ஆட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 30 வயது வீரரான ஜீசஸ் டி மிகுவல் உயிரிழந்தார். இது கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்பெயின் நாட்டில் இரண்டாவது டிவிஷன் கால்பந்து கிளப் ஆட்டத்தின் போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. அந்நாட்டின் நேரப்படி திங்கள்கிழமை அன்று சி.டி டெனிரீப் மற்றும் எப்.சி அண்டோரா அணிகள் விளையாடி உள்ளன.

இந்த ஆட்டத்தின் போது சி.டி டெனிரீப் அணியின் முன்கள வீரரான ஜீசஸ் டி மிகுவல் பந்தை கடத்தி செல்ல முயற்சித்தார். அப்போது அவரை தடுக்கும் நோக்கில் எதிரணியின் கோல்கீப்பர் முன்னேறி வந்திருந்தார். எதிர்பாராத விதமாக இருவரும் பலமாக மோதிக் கொண்டனர். அடுத்த விநாடியே ஜீசஸ் டி மிகுவல் களத்தில் சுருண்டு விழுந்தார்.

அசைவில்லாமல் இருந்த அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. முதலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதற்கான சிகிச்சையில் அவர் இருப்பதாகவும் ஸ்பெயின் நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று காலை 8 மணி (ஸ்பெயின் நாட்டு நேரப்படி) அளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல்நிலை நரம்பியல் ரீதியாக மிக மோசமாக பாதிக்கப்பட்டது என்று சி.டி டெனிரீப் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாட்ரிட் நகரில் பிறந்த ஜீசஸ் டி மிகுவல், கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழில்முறை ரீதியாக சீனியர் பிரிவில் விளையாடி வந்தார். கடந்த ஆண்டுதான் டெனிரீப் அணியில் அவர் இணைந்தார்.

அவரது மறைவுக்கு டெனிரீப் அணி நிர்வாகம் மற்றும் சக அணி வீரர்கள், பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் உள்ளிட்ட முன்னணி ஸ்பெயின் கால்பந்து கிளப் அணிகள், ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பு, ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம், கால்ப்பந்து நட்சத்திரங்கள் லியோனல் மெஸ்ஸி, எம்பாப்பே, டென்னிஸ் வீரர் நடால், கால்பந்து ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கால்பந்து உலகை சோகமடைய செய்துள்ளது.

ஸ்பெயினில் சோகம்: கால்பந்தாட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் 30 வயது வீரர் உயிரிழப்பு
“விவாதத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைவரை நடுவராக நியமிக்கலாம்” - பிரதமர் மோடிக்கு ராகுல் சவால்

X