இன்று ‘டீம் இந்தியா’ என்றால் ‘வெற்றி’ - ஜெய் ஷா பெருமிதம்

இன்று  ‘டீம் இந்தியா’ என்றால் ‘வெற்றி’ - ஜெய் ஷா பெருமிதம்
Updated on
1 min read

ஒருகாலத்தில் “ஆஸ்திரேலியா” என்ற பெயர் வெற்றியை குறித்தது போல, இன்று “டீம் இந்தியா” என்ற பெயரே உலக கிரிக்கெட்டில் வெற்றியின் அடையாளமாக மாறியுள்ளது என்று ஐசிசி சேர்மன் ஜெய் ஷா பெருமிதம் கொண்டுள்ளார்.

சமீபத்தில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்ட முதல் அணியாக சாதனை படைத்தது. ஒரு தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசும்போது ஜெய் ஷா, “ஒரு காலத்தில் ஆஸ்திரேலியா என்றால் வெற்றி என்று அர்த்தம் கொண்டது. இன்று உலக கிரிக்கெட்டில் ‘டீம் இந்தியா’ என்ற பெயரே வெற்றியின் அடையாளமாக மாறியுள்ளது. அதுதான் இப்போது நிஜ நிலைமை.

2019 ஆம் ஆண்டு பிசிசிஐ செயலாளராக நான் பொறுப்பேற்றது முதல் 2026 வரை கடந்த ஏழு ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் பல முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளது. இந்த காலத்தில் இந்தியா இரண்டு அண்டர்-19 ஆண்கள் உலகக் கோப்பை, இரண்டு அண்டர்-19 பெண்கள் உலகக் கோப்பை வெற்றிகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஒருமுறை இரண்டாம் இடம், ஒருமுறை ஒருநாள் உலகக் கோப்பையில் இரண்டாம் இடம், தொடர்ந்து இரண்டு டி20 உலகக் கோப்பைகள் மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிரோபி போன்ற வெற்றிகளைப் பெற்றுள்ளது.

கிரிக்கெட்டை நான் 1998 முதல் தொடர்ந்து கவனித்து வருகின்றேன். 2009 முதல் நிர்வாகியாகச் செயல்பட்டு வருகிறேன். உச்ச நிலையை அடைய பல ஆண்டுகள் ஆகும், ஆனால் அந்த நிலைமையிலிருந்து கீழே விழுவது சில மாதங்களில் நடக்கக்கூடும் என்பதால், தற்போதைய உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து கடுமையாக வீரர்கள் உழைக்க வேண்டும்.

நான் பிசிசிஐயில் இருந்த போது 2028 ஒலிம்பிக் போட்டிகளை நோக்கித் திட்டமிட்டோம். பின்னர் சூரியகுமார் யாதவ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதும் நான் ஐசிசிக்கு சென்றேன். தற்போது பிசிசிஐயில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில், அனைவரும் சேர்ந்து 2030 மற்றும் 2032 ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு தயாராக வேண்டும்.” என்றார்.

இன்று  ‘டீம் இந்தியா’ என்றால் ‘வெற்றி’ - ஜெய் ஷா பெருமிதம்
“ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா வெல்வதே இலக்கு” - கேப்டன் ஷுப்மன் கில் பகிர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in