முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து இன்று மோதல்

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து இன்று மோதல்
Updated on
2 min read

வதோதரா: இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் இடையி​லான முதல் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி வதோத​ரா​வில் உள்ள கோடாம்பி மைதானத்​தில் இன்று பிற்​பகல் 1.30 மணிக்கு நடை​பெறுகிறது.

நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி 3 ஒரு​நாள் போட்​டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இந்தியாவில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இந்​நிலை​யில் இருதரப்பு ஒரு​நாள் போட்​டித் தொடரின் முதல் ஆட்​டம் குஜ​ராத் மாநிலம் வதோத​ரா​வில் உள்ள கோடாம்பி மைதானத்​தில் இன்று நடை​பெறுகிறது.

இந்​திய அணி ஷுப்​மன் கில் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. அடுத்த மாதம் நடை​பெற உள்ள ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் ஷுப்​மன் கில்​லுக்கு இடம் வழங்​கப்​பட​வில்​லை. டி 20 போட்​டிகளில் மோச​மான பார்ம் காரண​மாக அவர், தனது இடத்தை இழந்​திருந்​தார். உலகக் கோப்பை தொடருக்​கான அணி அறி​விப்​புக்கு பின்​னர் இந்​திய அணி எதிர்​கொள்​ளும் தொட​ராக நியூஸிலாந்து போட்டி அமைந்​துள்​ளது.

இதனால் இந்​தத் தொடரில் ஷுப்​மன் தனது மட்டை வீச்​சால் பதிலடி கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும். மேலும் அவர், ஸ்டிரைக் ரேட்​டிலும் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். 2027-ம் ஆண்டு நடை​பெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்​பையை நோக்கி பயணித்து வரும் சீனியர் நட்​சத்​திர பேட்​ஸ்​மேன்​களான ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோர் சிறந்த பார்​மில் இருப்​ப​தால் அவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும்.

ஷுப்​மன் கில் தொடக்க வீர​ராக களமிறங்​கு​வ​தால், தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான தொடரில் தனது முதல் சதத்தை விளாசிய யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் வெளியே அமர​வைக்​கப்​படக்​கூடும். காயத்​தில் இருந்து மீண்டு வந்​துள்ள ஸ்ரேயஸ் ஐயர் 4-வது இடத்தில் களமிறங்​கக்​கூடும். அவரைத் தொடர்ந்து விக்​கெட் கீப்பர் பேட்​ஸ்​மே​னாக கே.எல்​.​ராகுல் இடம் பெறு​வார்.

இதனால் ரிஷப் பந்த்​துக்கு விளை​யாடும் லெவனில் வாய்ப்பு கிடைப்​பது சந்​தேகம்​ தான். ஆல்-​ர​வுண்​டர்​களாக நிதிஷ் குமார் ரெட்​டி, ரவீந்​திர ஜடேஜா இடம் பெறக்​கூடும். பிர​தான சுழற் ​பந்து வீச்​சாள​ராக குல்​தீப் யாதவ் சேர்க்​கப்​படக்​கூடும். ஜஸ்​பிரீத் பும்​ரா, ஹர்​திக் பாண்​டியா ஆகியோ​ருக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ள​தால் அர்​ஷ்தீப் சிங், மொகமது சிராஜ், ஹர்​ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரை நம்​பியே இந்​திய அணி​யின் வேகப்​ பந்து வீச்சு துறை களமிறங்​கு​கிறது.

கடந்த ஆண்​டில் நியூஸிலாந்து அணி இந்​திய மண்​ணில் நடை​பெற்ற டெஸ்ட் தொடரை 3-0 என வென்று வரலாற்று சாதனை படைத்​திருந்​தது. இந்த தோல்வி​களுக்கு தற்​போதைய தொடரில் இந்​திய அணி பதிலடி கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

நியூஸிலாந்து அணி​யில் முன்​னணி வீரர்​கள் பலர் இந்​தத் தொடரில் விளை​யாட​வில்​லை. இடுப்பு பகு​தி​யில் ஏற்​பட்ட காயம் காரண​மாக கேப்​டன் மிட்​செல் சாண்ட்​னர் விளை​யா​டாத​தால் மைக்​கேல் பிரேஸ்​வெல் தலை​மை​யில் நியூஸிலாந்து அணி களமிறங்​கு​கிறது. டாம் லேதம், தனது முதல் குழந்தை பிறப்பையொட்டி தாயகம் திரும்பி உள்​ளார்.

முன்​னாள் கேப்​ட​னான கேன் வில்​லி​யம்​சன், தென் ஆப்​பிரிக்​கா​வில் நடை​பெற்று வரும் தொழில் முறை டி 20 தொடரில் விளை​யாடி வரு​கிறார். ஆல்​ர​வுண்​டர் ரச்​சின் ரவீந்​தி​ரா, வேகப்​பந்து வீச்​சாளர் ஜேக்​கப் டபி ஆகியோ​ருக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது. காயத்​தில் இருந்து மேட் ஹென்றி குணமடைந்​துள்ள போதி​லும், அவர் டி 20 தொடரில் மட்​டுமே விளை​யாடு​வார் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

முன்​னணி வீரர்​கள் இல்​லாத போதி​லும் பேட்​டிங்​கில் டெவன் கான்​வே, டேரில் மிட்​செல், ஹென்றி நிக்​கோல்​ஸ், வில் யங், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் நம்​பிக்கை அளிக்​கக்​கூடும். இளம் வீரர்​களான ஆதித்யா அசோக், ஜெய்​டன் லெனாக்ஸ் ஆகியோர் மீதும் எதிர்​பார்ப்பு உள்​ளது.

நேரம்​: பிற்​பகல்​ 1:30 | நேரலை: ஸ்​டார்​ ஸ்போர்ட்ஸ் |

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து இன்று மோதல்
ஐ-பேக் அலுவலகத்தில் சோதனை: உச்ச நீதிமன்றத்தில் மே.வங்க அரசு கேவியட் மனு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in