

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் தொடரின் 10-வது சீசன் வரும் 4-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான முதற்கட்ட போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் 15 வரை திண்டுக்கல், நத்தம் பகுதியில் அமைந்துள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இப்போட்டிகளுக்கான நேரடி டிக்கெட் விற்பனை மையம் இன்று (1-ம் தேதி) முதல் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி நுழைவாயிலில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படத் தொடங்கும். மேலும், ரசிகர்கள் District.in என்ற இணையதளம் மற்றும் செயலி வாயிலாகவும் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை ரூ.200 ஆகும்.