

புதுடெல்லி: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-0 என தன்வசப்படுத்தியது. 4-வது டி 20 போட்டி விசாகப்பட்டினத்தில் நாளையும் (28-ம் தேதி), கடைசி மற்றும் 5-வது போட்டி வரும் 31-ம் தேதி திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.
இந்தத் தொடரின் முதல் 3 ஆட்டங்களிலும் வயிற்று அறுவை சிகிச்சை காரணமாக இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான திலக் வர்மா விலகியிருந்தார். எனினும் கடைசி 2 ஆட்டங்களில் அவர், விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது திலக் வர்மா, பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். போட்டிகளில் விளையாடுவதற்கான முழு உடற்தகுதியை அவர், இன்னும் அடையவில்லை. இதனால் நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 டி20 போட்டிகளிலும் திலக் வர்மா களமிறங்கமாட்டார் எனவும் அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் அணியில் தொடர்வார் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.