மகளிர் உலகக் கோப்பை கால்பந்து அடுத்த ஆண்டு ஜூன் 24-ல் தொடக்கம்

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து அடுத்த ஆண்டு ஜூன் 24-ல் தொடக்கம்
Updated on
1 min read

சூரிச்: பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2027-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி முதல் ஜூலை 25 வரை பிரேசிலில் நடை​பெறுகிறது. இந்த போட்​டிக்​கான அட்​ட​வணையை சுவிட்​சர்​லாந்​தின் சூரிச் நகரில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பிஃபா அறி​வித்​தது.

எந்​தெந்த அணி​கள் யாருடன் மோதுகிறார்​கள் என்ற விவரம் வெளி​யிடப்​ப​டா​மல் போட்டி நடை​பெறும் தேதி மற்​றும் இடங்​கள் மட்​டும் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. தொடரின் அனைத்து ஆட்​டங்​களும் பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ, சாவோ பாலோ, பிரேசிலி​யா, பெலோ ஹொரிசோன்​டே, ஃபோர்​டலே​சா, சால்​வ​டார், ரெசிஃப், போர்டோ அலெக்ரே ஆகிய 8 நகரங்​களில் நடை​பெறும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஒவ்​வொரு நகரிலும் குறைந்​த​பட்​சம் 7 ஆட்​டங்​கள் நடை​பெற உள்ளன. இதில் ஒரு நாக் அவுட் போட்​டி​யும் இருக்​கும். மொத்​தம் 64 ஆட்​டங்​கள் நடை​பெறுகின்​றன. தொடக்க மற்​றும் இறு​திப்போட்டி புகழ்​வாய்ந்த ரியா டி ஜெனிரோ நகரில் உள்ள மரக்​கானா மைதானத்​தில் நடை​பெற உள்​ளது.

தொடரை நடத்​தும் பிரேசில் அணி, தனது முதல் ஆட்​டத்தை ஜூன் 24 அன்று மரக்​கானா மைதானத்​தில் விளை​யாடு​கிறது. அதைத் தொடர்ந்து 2-வது ஆட்​டத்தை ஜூன் 29-ல் சாவோ பாலோ​வில் உள்ள அரேனா இடாக்​கேரா மைதானத்​தி​லும், கடைசி லீக் ஆட்டத்தை ஜூலை 4 அன்று பிரேசிலி​யா​வில் உள்ள எஸ்​டாடியோ நேஷனல் மைதானத்​தி​லும் விளை​யாடு​கிறது பிரேசில்​ அணி.

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து அடுத்த ஆண்டு ஜூன் 24-ல் தொடக்கம்
திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி | TNPL 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in