திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி | TNPL 2026

திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி | TNPL 2026
Updated on
1 min read

சென்னை: டிஎன்​பிஎல் டி20 தொடரில் சென்னை சேப்​பாக்​கம் எம்.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் மதுரை பேந்தர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த மதுரை பேந்​தர்ஸ் அணி 20 ஓவர்​களில் 9 விக்கெட்​கள் இழப்​புக்கு 157 ரன்​கள் எடுத்​தது.

அதி​கபட்​ச​மாக அத்​திக் உர் ரஹ்​மான் 30 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 43 ரன்​கள் விளாசி​னார். திருப்​பூர் தமிழன்ஸ் அணி தரப்​பில் மதி​வாணன் 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். நடராஜன், மோகன் பிர​சாத் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். 158 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த திருப்​பூர் தமிழன்ஸ் அணி 17.4 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 160 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.

பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 45 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 8 பவுண்டரிகளு​டன் 65 ரன்​களும், கேப்​டன் துஷார் ரஹேஜா 17 பந்துகளில், 7 சிக்​ஸர்​களு​டன் 48 ரன்​களும் விளாசினர். திருப்​பூர் தமிழன்ஸ் அணிக்கு இது 4-வது வெற்​றி​யாக அமைந்​தது. 6 ஆட்டங்களில் விளை​யாடி உள்ள அந்த அணி 4 வெற்​றி, 2 தோல்விகளு​டன் 8 புள்​ளி​கள் பெற்​றுள்​ளது. மதுரை பேந்​தர்ஸ் அணிக்கு இது 2-வது தோல்​வி​யாக அமைந்​தது. அந்த அணி​யும் 4 வெற்​றிகளு​டன் 8 புள்​ளி​களை தன்​வசம் வைத்​துள்​ளது.

திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி | TNPL 2026
வங்கதேச அதிபர் தேர்தலில் மிர்சா ஃபக்​ருல் இஸ்​லாம் ஆலம்​கீர் வெற்றி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in