பந்துவீச்சு வியூகங்களை மாற்றி அமைக்குமா இந்திய அணி?

இந்தூரில் நாளை கடைசி ஒருநாள் போட்டி
பந்துவீச்சு வியூகங்களை மாற்றி அமைக்குமா இந்திய அணி?
Updated on
2 min read

இந்தூர்: நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணிகள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் வதோத​ரா​வில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்திய அணி 4 விக்​கெட்​கள் வித்தியாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. தொடர்ந்து ராஜ்கோட்​டில் நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் நியூஸிலாந்து அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்​தது.

இதனால் தொடர் 1-1 என சமநிலை​யில் உள்​ளது. இந்நிலையில் ஒரு​நாள் போட்​டித் தொடரை வெல்​வது யார்? என்பதை தீர்​மானிக்​கும் வகை​யில் அமைந்​துள்ள கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்​கர் மைதானத்​தில் நாளை (18-ம் தேதி) நடை​பெறுகிறது. இந்த போட்​டி​யில் பங்கேற்பதற்காக நேற்று முன்​தினம் இரு அணி வீரர்​களும் இந்​தூர் வந்​தடைந்​தன. இதைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணி வீரர்​கள் நேற்று ஹோல்​கர் மைதானத்​தில் தீவிர பயிற்​சி​யில் ஈடு​பட்​டனர்.

அதேவேளை​யில் இந்​திய வீரர்​களுக்கு கட்​டாய பயிற்சியாக அமைய​வில்​லை. இதனால் பெரும்​பாலான வீரர்​கள் பயிற்​சி​யில் கலந்​து​கொள்​ள​வில்​லை. இருப்​பினும் இன்று நடை​பெறும் பயிற்​சி​யில் இந்​திய அணி வீரர்​கள் அனை​வரும் பங்​கேற்க உள்​ளனர். கடைசி ஒரு​நாள் போட்டி​யில் இந்​திய அணி தனது பந்​து​வீச்சு வியூ​கங்​களை மாற்றி அமைக்க வேண்​டிய கட்​டா​யத்​தில் உள்​ளது.

ஏனெனில் 2-வது ஒரு​நாள் போட்​டி​யில் இந்​திய அணி​யின் சுழற்​பந்து வீச்சு எந்த ஒரு கட்​டத்​தி​லும் நியூஸிலாந்து பேட்ஸ்​மேன்​களுக்கு அழுத்​தம் கொடுக்​க​வில்​லை. குல்​தீப் யாதவ், ரவீந்​திர ஜடேஜா ஆகியோரது சுழலில் நியூஸிலாந்து பேட்​ஸ்​மேன்​கள் ஸ்வீப் ஷாட் விளை​யாடி எளி​தாக ரன்​கள் சேர்த்​தனர். அதி​லும் டேரில் மிட்​செல், இந்திய சுழற்​பந்​து​வீச்சை நன்கு பதம்​பார்த்​தார். கால் நகர்வு​களை அரு​மை​யாக பயன்​படுத்திய அவர், இந்​திய அணி​யின் பந்​து​வீச்சு திட்​டங்​களை சீர்​குலைத்​தார்.

இதனால் ஒரு குழு​வாக இந்​தி​யா​வின் சுழற்​பந்து வீச்சாளர்களால் நியூஸிலாந்து அணி​யின் பேட்​ஸ்​மேன்களுக்கு தொடர்ச்​சி​யாக அழுத்​தம் கொடுக்க முடியாமல் போனது. அந்த ஆட்​டத்​தில் குல்​தீப் யாதவ் 10 ஓவர்​களை வீசி 82 ரன்​களை தாரை​வார்த்து இருந்​தார். அதேவேளை​யில் முதல் போட்​டி​யில் குல்​தீப் யாதவ் 9 ஓவர்களில் 52 ரன்​களை விட்​டுக்​கொடுத்​திருந்​தார்.

இது ஒரு​புறம் இருக்க கடைசி போட்டி நடை​பெறும் இந்தூர் ஹோல்​கர் மைதானத்​தின் எல்​லைக்​கோடு​கள் சிறிய​வை. மேலும் ஆடு​களம் பேட்​டிங்​கிற்கு சாதக​மாக இருக்​கும். இதனால் இந்​திய அணி பந்​து​வீச்சு திட்​டங்​களில் சில மாறு​தல்​களை மேற்​கொள்​ளக்​கூடும். பிரசித் கிருஷ்ணாவை நீக்​கி​விட்டு அர்​ஷ்தீப் சிங் சேர்க்​கப்பட அதிக வாய்ப்​பு​கள் உள்​ளன.

பிரசித் கிருஷ்ணா முதல் 2 ஆட்​டங்​களி​லும் மோச​மாக செயல்​பட​வில்​லை. எனினும் அவரது அவர், பேக் ஆஃப் தி லெந்த்​தில் பந்​துகளை வீசக்​கூடிய​வர். இந்த வகையி​லான பந்​து​வீச்சு சிறிய அளவி​லான ஆடு​களங்​களில் கைகொடுக்​காது. இதனால் ஸ்விங் மற்​றும் ஃபுல்​லர் லென்ந்த்​களை பயன்​படுத்​தும் அர்​ஷ்தீப் சிங் இடம் பெறக்​கூடும்.

மேலும் குல்​தீப் யாதவ் பிளாட்​டாக வீசுவ​தி​லும், ஸ்டெம்புகளை குறி​வைத்து வீசுவ​தி​லும் கூடு​தல் கவனம் செலுத்த வேண்​டும். ஏனெனில் இது​போன்ற சிறிய ஆடு​களங்​களில் பந்​துகளை ஃபிளைட்​டாக வீசி​னால் மைதானத்​துக்கு வெளியே அடிக்க அதிக வாய்ப்​

பு​கள் உள்​ளன. பந்​துகளின் நீளத்தை கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்​டும். சுழற்பந்து வீச்சை பலப்​படுத்​தும் வகை​யில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக ஆயுஷ் பதோனி அறி​முக வீர​ராக களமிறக்​கப்​பட ​வாய்​ப்​புகள்​ உள்​ளன.

பந்துவீச்சு வியூகங்களை மாற்றி அமைக்குமா இந்திய அணி?
தலைவர் தம்பி தலைமையில்: திரைப் பார்வை - ஒரு பகல்... ஓர் இரவு... நூறு கூத்துகள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in