இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
Updated on
1 min read

முலான்பூர்: இந்​தியா - ஆப்கானிஸ்தான் அணி​கள் இடையி​லான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் முலான்​பூரில் இன்று தொடங்​கு​கிறது.

ஆப்​கானிஸ்​தான் கிரிக்​கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒரு​நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இந்நிலை​யில் டெஸ்ட் போட்டி நியூ சண்​டிகரில் உள்ள முலான்பூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்​கு​கிறது.

இந்​திய அணி கடந்த முறை சொந்த மண்​ணில் தென் ஆப்பிரிக்கா​விடம் டெஸ்ட் தொடரை 2-0 என முழு​மை​யாக இழந்​திருந்​தது. இதனால் இந்​திய அணி ஆப்​கானிஸ்​தானை எளி​தாக எடுத்​துக்​கொள்​ளாது என்றே கருதப்​படு​கிறது. பேட்​டிங் வரிசையில் தொடக்க வீரர்​களாக யஷஸ்வி ஜெய்​ஸ்​வாலும், கே.எல்​.​ராகுலும் களமிறங்​கு​வார்​கள். 3-வது இடத்​துக்கு சாய் சுதர்சன், தேவ்​தத் படிக்​கல் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.

சாய் சுதர்​சன் 6 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி 27.4 சராசரியுடன் 302 ரன்​களே சேர்த்​துள்​ளார். எனினும் அவரது திறனை சோதிக்​கும் வகை​யில் தொடர்ச்​சி​யாக வாய்ப்பு வழங்கப்படக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. 4-வது இடத்​தில் கேப்​டன் ஷுப்​மன் கில் களமிறங்​கு​வார். அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்த், துருவ் ஜூரெல் இடம் பெறக்​கூடும்.

வேகப்​பந்து வீச்​சாளர்​களாக முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா இடம் பெறு​வார்​கள். சுழற்​பந்து வீச்​சில் ரவீந்​திர ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ள​தால் அவரது இடத்தை பூர்த்தி செய்​யும் வகை​யில் மானவ் சுதர் அல்​லது ஹர்ஷ் துபேவுக்கு வாய்ப்பு வழங்கப்​படக்​கூடும். இதில் ராஜஸ்​தானை சேர்ந்த இடது கை சுழற்​பந்து வீச்​சாள​ரான மானவ் சுதரே இடம் பெற அதிக வாய்ப்பு உள்​ளது.

ஏனெனில் கடந்த ஓரிரு நாட்​களாக நடந்த வலைப்​ப​யிற்​சி​யின் போது மிக​வும் நேர்த்​தி​யான, பாரம்​பரிய​மான பந்​து​வீச்சு முறையை​யும் பந்​தைக் காற்​றில் மிதக்​க​விட்டு ஏமாற்​றும் திறனை​யும் மானவ் சுதர் வெளிப்​படுத்​தி​யிருந்​தார்.

மேலும் பேட்​டின் வெளிப்​பக்க விளிம்​பிற்​கும், அதே நேரத்​தில் உள்பக்க விளிம்​பிற்​கும் சவால் விடும் சிறப்​பான திறமை​யை​யும் கொண்​டுள்​ளார். அதேவேளை​யில் பிர​தான சுழற்​பந்து வீச்சாளராக குல்​தீப் யாதவ் இடம் பெறக்​கூடும். ஆல்​ர​வுண்​டர் வரிசை​யில் வாஷிங்​டன் சுந்​தர் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

ஆப்​கானிஸ்​தான் அணி ஹஷ்மத்​துல்லா ஷாஹிதி தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. அந்த அணி சர்​வ​தேச டெஸ்ட் அரங்​கில் குறைந்த அளவி​லான போட்​டிகளி​லேயே வெற்றி கண்​டுள்​ளது. கடந்த 2018-ம் ஆண்டு பெங்​களூரு​வில் இந்​தி​யா​வுக்கு எதி​ராக ஆப்​கானிஸ்​தான் வரலாற்​றுச் சிறப்​புமிக்க முதல் டெஸ்ட் போட்டியை விளை​யாடி இருந்​தது.

2 நாட்​களி​லேயே முடிவடைந்த இந்த போட்​டி​யில் இந்​திய அணி வெற்றி கண்​டிருந்​தது. இதன் பின்​னர் தற்​போது வரை ஆப்கானிஸ்​தான் அணி மேற்​கொண்டு 11 டெஸ்ட் போட்​டிகளில் மட்​டுமே விளை​யாடி​யுள்​ளது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
இந்திய டி20 அணியின் கேப்டனாகிறார் ஸ்ரேயஸ் ஐயர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in