இந்திய டி20 அணியின் கேப்டனாகிறார் ஸ்ரேயஸ் ஐயர்

இந்திய டி20 அணியின் கேப்டனாகிறார் ஸ்ரேயஸ் ஐயர்
Updated on
1 min read

மும்பை: ​இந்​திய கிரிக்​கெட் அணி இம்​மாத இறு​தி​யில் அயர்லாந்து மற்​றும் இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடு​கிறது. அயர்​லாந்து அணிக்கு எதி​ராக 2 டி20 போட்டிகளில் இந்​திய அணி விளை​யாட உள்​ளது. இந்த ஆட்டங்கள் ஜூன் 26 மற்​றும் 28-ம் தேதி​களில் பெல்ஃ​பாஸ்ட் நகரில் நடை​பெற உள்​ளது.

இதைத் தொடர்ந்து இங்​கிலாந்து செல்​லும் இந்​திய அணி அங்கு 5 டி20 ஆட்​டங்​கள், 3 ஒரு​நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​கிறது. இந்​தத் தொடர் ஜூலை 1-ல் தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இந்த தொடர்​களுக்​கான இந்​திய அணி தேர்வு மும்பை​யில் இன்று நடை​பெறுகிறது. அநேக​மாக டி 20 தொடர்களுக்கு கேப்​ட​னாக ஸ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்​யப்​படக்​கூடும் என தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இதே​போன்று 15 வயதாகும் வைபவ் சூர்​ய​வன்​ஷி​யும் அறி​முக வீரராக இடம் பெறக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. டி 20 உலகக் கோப்​பையை வென்று கொடுத்த கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் கடந்த 18 மாதங்​களாக பார்​மின்றி தவித்து வரு​வ​தால் இந்திய அணி​யில் இருந்து நீக்​கப்​படக்​கூடும். 31 வயதாகும் ஸ்ரேயஸ் ஐயர், ஐபிஎல் கேப்​ட​னாக சிறப்​பாக செயல்பட்டிருந்தார்.

இதன் அடிப்​படை​யிலும் அடுத்த டி 20 உலகக் கோப்​பையை கருத்தில் கொண்​டும் அஜித் அகர்​கர் தலை​மையி​லான தேர்​வுக்​குழு​வினர் ஸ்ரேயஸ் ஐயரை இந்​திய அணி​யின் கேப்​ட​னாக தேர்வு செய்ய அதிக வாய்ப்​பு​கள் உள்​ளன.

சமீபத்​தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் சிறப்​பாக பந்​து​வீசிய புவனேஷ்வர் குமாருக்​கும் வாய்ப்பு வழங்​கப்​படக்​கூடும். செப்​படம்​பர் மாதம் ஜப்​பானில் நடை​பெற உள்ள ஆசிய விளை​யாட்டு போட்​டிக்​கான இந்​திய அணி​யும் இன்று அறிவிக்​கப்​பட உள்​ளது.

இந்திய டி20 அணியின் கேப்டனாகிறார் ஸ்ரேயஸ் ஐயர்
2 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து முதல் ஓவரிலேயே 3 விக்கெட்: அசத்திய ஆலி ராபின்சன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in