

டாக்கா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து வங்கதேச வீரர் மோமினுல் ஹக் காயம் காரணமாக விலகியுள்ளார். வங்கதேசத்தில், மேற்கு இந்தியத் தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் இந்தத் தொடரில் முதல் டெஸ்டில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 5-ம் தேதி சில்ஹெட் மைதானத்தில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து வங்கதேச வீரர் மோமினுல் ஹக் விலகியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது மோமினுல் ஹக் காயமடைந்தார்.
அந்த காயத்திலிருந்து குணமடையாததால் அவர் 2-வது போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அணியில் அமைத் ஹுசன் சேர்க்கப்பட்டுள்ளார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.