

ஜலந்தர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின.
இதில் இந்திய அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ஹர்மன்பிரீத் சிங் ஹாட்ரிக் கோல்கள் அடித்தார். மற்றொரு கோலை சுக்ஜீத் சிங் அடித்தார். மலேசிய அணி தரப்பில் ஷெல்லோ, அகிமுல்லா அனுர் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.