தென் ஆப்​பிரிக்கா​வுடன் இன்று பலப்பரீட்சை: மே.இ.தீவுகளின் அதிரடி எடுபடுமா?

தென் ஆப்​பிரிக்கா​வுடன் இன்று பலப்பரீட்சை: மே.இ.தீவுகளின் அதிரடி எடுபடுமா?
Updated on
2 min read

அகம​தா​பாத்: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இரு முறை சாம்​பிய​னான பவர் ஹிட்​டர்​கள் நிறைந்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி, தென் ஆப்​பிரிக்கா​வுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்த இரு அணிகளுமே இது​வரை தோல்​வியை சந்​திக்​க​வில்​லை. மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி சூப்​பர் 8 சுற்​றில் தனது முதல் ஆட்​டத்​தில் 107 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் ஜிம்​பாப்வே அணியை தோற்​கடித்து இருந்​தது. மறு​புறம் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் ஆட்​டத்​தில் நடப்பு சாம்பியனான இந்​தி​யாவை 76 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வென்​றிருந்​தது.

மேற்​கிந்​திய தீவு​கள் அணி​யின் பேட்​டிங் வரிசை அதிக அளவி​லான பவர்​-ஹிட்​டர்​களை கொண்​டது. முதல் பந்​தில் இருந்து தாக்​குதல் ஆட்​டம் தொடுக்​கும் திறன் கொண்ட இவர்​கள், ஆட்​டத்​தின் எந்த ஒரு கட்​டத்​தி​லும் போட்​டி​யின் முடிவை மாற்​றும் திறன் கொண்​ட​வர்​களாக திகழ்கின்றனர். இருப்​பினும் தென் ஆப்​பிரிக்க அணி​யின் பந்து வீச்சு பலமான​தாக உள்​ள​தால் இன்​றைய ஆட்​டம் ரசிகர்​களுக்கு விருந்​தாக அமையக்​கூடும்.

நடப்பு தொடரில் மார்கோ யான்​சன், கேசவ் மகா​ராஜ், காகிசோ ரபா​டா, லுங்கி நிகிடி ஆகிய பிர​தான பந்து வீச்சாளர்​களை உள்​ளடக்​கிய தென் ஆப்​பிரிக்க அணியானது எதிரணி​யின் பேட்​ஸ்​மேன்​களுக்கு சவால் அளித்து வரு​கிறது. கார்​பின் போஷ், எய்​டன் மார்க்​ரம் ஆகியோ​ரும் பந்​து​வீச்​சில் கைகொடுத்து வரு​கின்​றனர்.

பேட்​டிங்​கில் டேவிட் மில்​லர், டெவால்ட் பிரே​விஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் இந்​திய அணிக்கு எதி​ராக அபார​மான ஆட்​டத்தை வெளிப்​படுத்தி இருந்​தனர். இந்த ஆட்​டத்​தில் தொடக்​கத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி 20 ரன்களுக்கு 3 விக்​கெட்​களை இழந்​திருந்​தது. ஆனால் டேவிட் மில்​லர் தனது அனுபவத்​தால் அற்​புத​மாக செயல்பட்டு 35 பந்​துகளில் 63 ரன்​களை விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தார்.

அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய பிரே​விஸ் 45 ரன்களும், இறு​திக்​கட்​டத்​தில் அதிரடி காட்​டிய டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 44 ரன்​களும் விளாசினர். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்​டம் வெளிப்​படக்​கூடும். டாப் ஆர்டர் பேட்​ஸ்​மேன்​களான எய்​டன் மார்க்​ரம், குயிண்​டன் டி காக், ரியான் ரிக்​கெல்​டன் ஆகியோர் மீண்​டும் பார்முக்கு திரும்​புவ​தில் கவனம் செலுத்​தக்​கூடும்.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யில் ஷிம்​ரன் ஹெட்​மயர் சிறந்த பார்​மில் உள்​ளார். நடப்பு தொடரில் அதிக ரன்​கள் குவித்​தவர்​களின் பட்​டியலில் 2 அரை சதங்​களு​டன் 219 ரன்கள் சேர்த்​துள்ள ஷிம்​ரன் ஹெட்​மயரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்​படக்​கூடும். கேப்​டன் ஷாய் ஹோப், ரோவ்​மன் பவல், பிரண்​டன் கிங், ரோமாரியோ ஷெப்​பர்​டு, ஷெர்​பேன் ரூதர்​போர்டு ஆகியோ​ரும் தென் ஆப்​பிரிக்க அணி​யின்​ பந்துவீச்சு துறைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.

அகமதாபாத் சாதகம்

நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி தனது பெரும்பாலான ஆட்டங்களை அகமதாபாத் நரேந்திர மோடிமைதானத்திலேயே விளையாடி உள்ளது. இங்கு அந்த அணி லீக் சுற்றில் 3 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்தது. இதைத் தொடர்ந்து சூப்பர் சுற்றின் ஒரு ஆட்டத்திலும் வெற்றியை வசப்படுத்தியது. இதனால் அந்த அணி ஆடுகளத்தின் தன்மையை நன்கு தகவமைத்துக் கொண்டு அதற்கு தகுந்தபடி சிறப்பாக விளையாடி வருகிறது. இது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஆடுகளம் எப்படி?

இன்றைய போட்டி பிற்பகலில் நடைபெறுவதால் ஆடுகளத்தின் மேற்பரப்பு சற்று வறண்டதாக இருக்கக்கூடும். இதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நேரம் செல்லச் செல்ல ஆடுகளத்தின் தன்மை மந்தமாக மாறினால் பேட்ஸ்மேன்கள் நெருக்கடியை சந்திக்க நேரிடலாம்.

காத்திருக்கும் இந்திய அணி?

தென் ஆப்பிரிக்கா - மேற்கு இந்தியத் தீவுகள் மோதும் ஆட்டத்தின் முடிவு இந்திய அணியின் அடுத்த சுற்று வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றால் இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு சிக்கலாகக்கூடும்.

தென் ஆப்​பிரிக்கா​வுடன் இன்று பலப்பரீட்சை: மே.இ.தீவுகளின் அதிரடி எடுபடுமா?
தேர்தலை முன்னிட்டு இலவச அறிவிப்புகளுக்கு தடை கோரும் மனுவை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in