யு19 உலகக் கோப்பையை வென்றது இந்தியா - இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!

6-வது முறையாக சாம்பியனாகி அசத்தல்!
யு19 உலகக் கோப்பையை வென்றது இந்தியா - இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
Updated on
2 min read

ஹராரே: நடப்பு யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி. இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரின் இறுதிப் போட்டியில் 80 பந்துகளில் 175 ரன்கள் விளாசி இருந்தார் இந்தியாவின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி.

ஜிம்பாப்வே நாட்டின் தலைநகரான ஹராரேவில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் வைபவ் சூர்யவன்ஷி 175, கேப்டன் ஆயுஷ் மாத்ரே 53, அபிக்யான் குண்டு 40, விஹான் மல்ஹோத்ரா 30, கனிஷ்க் சவுஹான் 37 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியின் இந்த 411 ரன்கள் யு19 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக அமைந்தது. இந்த தொடரின் வரலாற்றில் மூன்றாவது முறையாக 400+ ரன்களை இந்தியா கடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் வரலாற்றில் அதிகபட்சமாக 311 ரன்கள் இலக்கு சேஸ் செய்யப்பட்டுள்ளது. அந்த சாதனையை நடப்பு தொடரின் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா இந்த இலக்கை வெற்றிகரமாக விரட்டியது.

இந்தச் சூழலில் 412 ரன்கள் என்ற மெகா இலக்கை இங்கிலாந்து அணி விரட்டியது. அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. 22 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து இங்கிலாந்து தடுமாறியது. அதன் பின்னர் 8-வது விக்கெட்டுக்கு ஜேம்ஸ் மிண்டோ உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஃபால்க்னர் ஆட்டத்தில் அதிரடி காட்டினார். அவரது ஆட்டம் இந்திய அணியின் வெற்றியை சற்று தாமதப்படுத்தும் விதமாக அமைந்தது.

ஜேம்ஸ் மிண்டோ விக்கெட்டை அம்ப்ரிஷ் கைப்பற்றினார். இதன் மூலம் ஃபால்க்னர், மிண்டோ இடையிலான 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து மேனி லும்ஸ்டன் விக்கெட்டையும் அம்ப்ரிஷ் வீழ்த்தினார். இறுதியாக 115 ரன்களில் ஃபால்க்னர் விக்கெட்டை இழந்தார். அவரது விக்கெட்டை கனிஷ்க் சவுஹான் வீழ்த்தினார். 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து. இதன் மூலம் 100 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது.

6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா: யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதற்கு முன்னர் கடந்த 2000, 2008, 2012, 2018 மற்றும் 2022-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில், தற்போது 6-வது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. இதற்கு முன்பு முகமது கைப், விராட் கோலி, உன்முக் சந்த், பிரித்வி ஷா, யாஷ் துல் ஆகியோர் தலைமையிலான இந்திய அணி பட்டம் வென்றுள்ளது. இப்போது இந்த வரிசையில் ஆயுஷ் மாத்ரே இணைந்துள்ளார்.

சூர்யவன்ஷி 175 ரன்கள் குவிப்பு:

இறுதிப் போட்டியில் தொடக்கம் முதலே பிளாஸ்ட் மோடில் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 55 பந்துகளில் சதம் கடந்தார். இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு 52 பந்துகளில் அவர் சதம் விளாசி இருந்தார். இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் இது சாதனையாக அமைந்துள்ளது. சதம் கண்ட பிறகு தனது ஆட்டத்தில் மேலும் வேகத்தை கூட்டினார். அதன் பலனாக 71 பந்துகளில் 150 ரன்கள் கடந்தார். இதன் மூலம் இழையோட கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 150 ரன்களை எட்டிய பேட்ஸ்மேனாக வைபவ் சூர்யவன்ஷி அறியப்படுகிறார்.

இந்த ஆட்டத்தில் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார் சூர்யவன்ஷி. தலா 15 ஃபோர் மற்றும் சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். இதன் மூலம் இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

யு19 உலகக் கோப்பையை வென்றது இந்தியா - இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
Sarvam Maya: நிவின் பாலியின் ஃபீல் குட் கவிதை | ஓடிடி திரை அலசல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in