இலங்கை மகளிர் அணியுடன் டி20 தொடரில் இந்தியா மோதல்

இலங்கை மகளிர் அணியுடன் டி20 தொடரில் இந்தியா மோதல்

Published on

புதுடெல்லி: வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட திட்டமிட்டு இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தத் தொடரை திடீரென பிசிசிஐ ஒத்திவைத்தது. இந்நிலையில் இந்த காலக்கட்டத்தில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இதன்படி இலங்கை மகளிர் அணி அடுத்த மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் டிசம்பர் 21 முதல் 30 வரை விசாகப்பட்டினம், திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. டிசம்பர் 21-ல் முதல் போட்டியும், 23-ம் தேதி 2-வது போட்டியும் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

26-ம் தேதி 3-வது போட்டியும், 28-ம் தேதி 4-வது போட்டியும், 30-ம் தேதி கடைசி மற்று 5-வது போட்டியும் திருவனந்தபுரத்தில் நடைபெறுகின்றன. இரு அணிகளும் இருதரப்பு டி20 தொடரில் 2016-ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் மோத உள்ளன.

இலங்கை மகளிர் அணியுடன் டி20 தொடரில் இந்தியா மோதல்
“பல்வேறு திட்டங்களுக்கு பகவத் கீதைதான் அடிப்படை” - உடுப்பியில் பிரதமர் மோடி பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in