ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்
Updated on
1 min read

பர்மிங்காம்: 10-வது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு பர்மிங்காமில் நடைபெறுகிறது.

இந்திய அணி கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இதன் தொடர்ச்சியாக டி20 உலகக் கோப்பையையும் வெல்வதில் இந்திய அணி தீவிரம் காட்டக்கூடும். இந்தியா, பாகிஸ்தான் மகளிர் அணிகள் இதுவரை டி20 போட்டிகளில் 16 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன.

இதில் இந்திய அணி 13 ஆட்டங்களிலும், பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. இந்த ஆதிக்கத்தை இந்திய அணி தொடரச் செய்வதில் கவனம் செலுத்தக்கூடும். பேட்டிங்கில் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ், யாஷ்திகா பாட்டியா, ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும்.

பாகிஸ்தான் அணி ஃபாத்திமா சனா தலைமையில் களமிறங்குகிறது. சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்திருந்த சனா, இந்திய பந்து வீச்சு துறைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in