ஆசிய யு-19 கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை

ஆசிய யு-19 கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை
Updated on: 
1 min read

அல் அமாரத்: ஆசிய யு-19 கிரிக்​கெட் தொடர் ஓமனில் நடை​பெற்று வரு​கிறது. இதன் அரை இறுதி​யில் நேற்று அல் அமாரத் நகரில் இந்​தியா யு-19 அணி, ஆப்​கானிஸ்​தான் யு-19 அணியை எதிர்த்து விளை​யாடியது. முதலில் பேட் செய்த ஆப்​கானிஸ்​தான் யு-19 அணி 50 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 227 ரன்​கள் எடுத்​தது.

அதி​கபட்​ச​மாக நோமன் சலார்​ஸாய், ஷா ஃபைசல் ரஹிமி ஆகியோர் தலா 51 ரன்​கள் சேர்த்​தனர். இந்​தியா யு-19 அணி தரப்​பில் இஷான் 3, ஆர்​யன் சவ்​ஷானி 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 229 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​தியா யு-19 அணி 36.5 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 230 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.

தொடக்க வீரரான கேப்​டன் லக்‌ஷயா ராய்ச்​சந்​தானி 90 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 13 பவுண்​டரி​களு​டன் 93 ரன்​களும், ஆர்​ய​வீர் சேவக் 57 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 51 ரன்​களும், விகே வினீத் 62 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 57 ரன்​களும் விளாசினர். 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​தியா யு-19 அணி இறுதிப் போட்​டிக்கு முன்​னேறியது.

நாளை (13-ம் தேதி) நடை​பெறும் இறுதிப் போட்​டி​யில் இந்​தியா யு-19, பாகிஸ்​தான் யு-19 அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்து​கிறது. பாகிஸ்​தான் யு-19 அரை இறுதி ஆட்​டத்​தில் வங்​கதேச யு-19 அணியை 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தியது.

இந்த ஆட்​டத்​தில் 139 ரன்​கள் இலக்கை துரத்​திய பாகிஸ்​தான் யு-19 அணி 21.5 ஓவர்​களில் ஒரு விக்​கெட்டை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது.

ஆசிய யு-19 கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை
நட்​புரீதி​யி​லான போட்டி: கால்பந்தில் இந்திய அணி தோல்வி

X