

ஆக்லாந்து: இந்தியா - நியூஸிலாந்து கால்பந்து அணிகள் இடையிலான சர்வதேச நட்புரீதியிலான போட்டி நேற்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் நியூஸிலாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
5-வது நிமிடத்தில் இந்திய அணியின் வீரர் பிஜோய் வர்க்கீஸ் சுய கோல் அடித்தார். இதனால் நியூஸிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து ஜெசி ராண்டல் 34 மற்றும் 43-வது நிமிடங்களில் கோல் அடித்து மிரட்டினார். இதனால் நியூஸிலாந்து அணி முதல் பாதியில் 3-0 என வலுவான முன்னிலையை பெற்றது. இதன் பின்னர் 57-வது நிமிடத்தில் கிறிஸ் வுட், 74-வது நிமிடத்தில் லாக்லான் பேலிஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். இரு அணிகளும் மீண்டும் ஒரு முறை வரும் 15-ம் தேதி மோதுகின்றன. இந்த ஆட்டம் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது.