முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துடன் இன்று மோதல்: வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி?

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துடன்  இன்று மோதல்: வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி?
Updated on: 
1 min read

கிறைஸ்ட்சர்ச்: 5 டி20 போட்டி, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடுவதற்​காக இந்​திய அணி, நியூஸிலாந்து சென்​றுள்​ளது. இதில் டி20 தொடர் இன்று தொடங்​கு​கிறது. கிறைஸ்ட்​சர்ச் நகரில் பகல் 12.30 மணிக்கு நடை​பெறும் ஆட்​டத்​தில் ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்​திய அணி, மிட்​செல் சாண்ட்​னர் தலை​மையி​லான நியூஸிலாந்து அணியை சந்​திக்​கிறது.

மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதிரான தொடர் முடிவடைந்த சில நாட்​களி​லேயே அனுபவம் இல்​லாத வீரர்​களை உள்​ளடக்​கிய ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்​திய அணி பயிற்சி பெற போது​மான நேர​மும், சூழ்​நிலைகளை அறிந்​து கொள்ள அவகாசமும் இல்​லாத நிலை​யில் நியூஸிலாந்து மண்​ணில் விளை​யாட உள்ளது.

தற்​போதைய இந்​திய அணி​யில் இடம் பெற்​றுள்ள வீரர்​களில் ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்​சன், ஷிவம் துபே ஆகியோர் மட்​டுமே நியூஸிலாந்​தில் இதற்கு முன்​னர் விளை​யாடி உள்​ளனர். அபிஷேக் சர்மா, திலக் வர்மா, 15 வய​தாகும் வைபவ் சூர்​ய​வன்ஷி போன்​றவர்​கள் அதிரடி​யாக ரன் குவிக்​கக் கூடிய​வர்​களாக இருந்​தா​லும், நியூஸிலாந்​தின் வேகத்​துக்​கும் ஸ்​விங் பந்​து​வீச்​சுக்​கும் சாதக​மான ஆடுகளம் மற்​றும் தட்​பவெப்ப நிலைக்கு ஏற்ப தங்​களை மாற்​றிக்​கொள்ள வேண்​டி​யிருக்​கும்.

ஹர்​திக் பாண்​டியா, பும்ரா ஆகியோர் இல்​லாதது இந்​திய அணிக்கு பின்​னடைவாகவே கருதப்​படு​கிறது. எனினும் அனுபவம் வாய்ந்த புவனேஷ்​வர் குமார் 4 வருடங்​களுக்கு பிறகு அணிக்கு திரும்பி இருப்​பது பலம் சேர்க்​கக்​கூடும். மேலும் வருண் சக்​ரவர்த்​தி​யும் காயத்​தில் இருந்து மீண்டு வந்​துள்​ளார்.

நியூஸிலாந்து அணி​யில் அதிரடி பேட்​டர்​களான கிளென் பிலிப்ஸ், ஃபின் ஆலன், ரச்​சின் ரவீந்​திரா, டெவன் கான்வே ஆகியோர் இந்​திய பந்​து​வீச்சு துறைக்கு சவால்​தரக்​கூடும். பந்​து​வீச்​சில் ஜேக்​கப் டஃபி, மேட் ஹென்றி, ஆடம் மில்னே, லாக்கி பெர்​குசன், கைல் ஜேமிசன், பிளேர் டிக்​னர் ஆகியோர் இந்​திய அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும்.

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துடன்  இன்று மோதல்: வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி?
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in