கடைசி ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: நியூஸி.க்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

கடைசி ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: நியூஸி.க்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?
Updated on: 
1 min read

மவுண்ட் மவுங்கனி: இந்​தியா - நியூஸிலாந்து அணிகள் இடை​யி​லான 5-வது மற்​றும் கடைசி ஒருநாள் கிரிக்​கெட் போட்டி மவுண்ட் மவுங்​க​னி​யில் உள்ள பே ஓவல் மைதானத்​தில் இன்று காலை 7.30 மணிக்கு நடை​பெறுகிறது.

இரு அணிகள் இடை​யி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட ஒருநாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் இந்​திய அணி 2-1 என முன்​னிலை வக்​கிறது. முதல் 2 ஆட்​டங்​களி​லும் இந்​திய அணி வெற்றி கண்​டிருந்த நிலை​யில் 3-வது ஆட்​டம் மழை காரண​மாக ரத்​தாகி​யிருந்​தது.

4-வது ஆட்​டத்​தில் நியூஸிலாந்து அணி 244 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று இந்​திய அணிக்கு பதிலடி கொடுத்​திருந்​தது.

இந்​நிலை​யில் கடைசி போட்டி இன்று நடை​பெறுகிறது. இந்​திய அணி இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றால் தொடரை கைப்​பற்​றும். அதேவேளை​யில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்​றால் தொடர் 2-2 என சமனில் முடிவடையும். இத​னால் இன்​றைய போட்டி ரசிகர்​கள் மத்​தி​யில் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்தி உள்​ளது.

நியூஸிலாந்து அணி கடந்த 7 ஆண்​டுகளாக சொந்த மண்​ணில் ஒருநாள் போட்​டித் தொடரை இழக்​காமல் இருந்து வரு​கிறது. இந்த சாதனையை அந்த அணி தொடரச் செய்​யுமா? என்​பது இன்​றைய ஆட்​டத்​தின் முடிவில் தெரியவரும்.

கடைசி ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: நியூஸி.க்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?
ஃபிடே தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை இழக்கும் நிலையில் மேக்னஸ் கார்ல்சன்

X