

மேக்னஸ் கார்ல்சன்
புடாபெஸ்ட்: ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூரின் விரைவு கிளாசிக்கல் போட்டி நடைபெற்று வருகிறது.
இதன் 3-வது நாள் ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரர் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், ஆர்மீனியாவின் ஹைக் மார்டிரோஸ்யனை எதிர்த்து விளையாடினார். இதில் 41-வது நகர்த்தலின் போது கார்ல்சன் தோல்வி அடைந்தார். கார்சல்சனுக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது.
இந்த தோல்வியால் 35 வயதாகும் கார்ல்சன் நம்பர் ஒன் இடத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை முதல் உலகின் நம்பர் 1 வீரராக இருந்து வரும் கார்ல்சன், ஃபிடேவின் லைவ் ரேட்டிங்கில் 15.8 புள்ளிகள் குறைந்து 2,807.2 புள்ளிகளுடன் உள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்காவின் ஃபேபியானோ கருணா 5 வெற்றிகள், 2 டிராக்களைப் பதிவு செய்து 17 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்று 2,800 புள்ளிகளை எட்டியுள்ளார்.