இலங்கை பிரதமர் லெவன் அணிக்கு எதிராக இன்று பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மோதல்

இலங்கை பிரதமர் லெவன் அணிக்கு எதிராக இன்று பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மோதல்
Updated on
1 min read

கொழும்பு: ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இலங்​கை​யில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது.

முதல் டெஸ்ட் போட்டி வரும் 15 முதல் 19 வரை காலே நகரிலும், 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி 23 முதல் 27 வரை கொழும்பு நகரிலும் நடை​பெறுகின்​றன.

முன்​ன​தாக இந்​திய அணி 3 நாட்​கள் கொண்ட பயிற்சி ஆட்​டத்​தில் இலங்கை பிரதமர் லெவன் அணி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் இன்று காலை 10 மணிக்கு கொழும்பு நகரில் உள்ள நான்​டிஸ்​கிரிப்ட்ஸ் கிரிக்​கெட் கிளப் மைதானத்​தில் தொடங்​கு​கிறது.

இந்​திய அணி கடந்த இரு தொடர்​களி​லும் சொந்த மண்​ணில் நியூஸிலாந்​து, தென் ஆப்​பிரிக்க அணி​களுக்கு எதி​ராக சுழற்​பந்​து​வீச்​சில் மோச​மாக விளை​யாடி தோல்வி​களை சந்​தித்து இருந்​தது. இதனால் சுழலுக்கு சாதக​மாக இருக்​கும் இலங்கை ஆடு​களங்​களும் இந்​திய அணிக்கு சவாலாக அமையக்​கூடும். இதற்கு தயா​ராகும் வித​மாக இந்​திய அணி பயிற்சி ஆட்​டத்தை பயன்​படுத்​திக்​கொள்​ளும்.

இதற்​கிடையே இலங்கை புறப்​படு​வதற்கு முன்​ன​தாக ஷுப்​மன் கில், கே.எல்​.​ராகுல் யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் உள்​ளிட்ட அணி​யின் முன்​னணி பேட்​ஸ்​மேன்​கள் சுழற்​பந்து வீச்சை எதிர்​கொள்​ளும் பயிற்​சிகளைத் தனிப்​பட்ட முறை​யில் தொடங்​கி​யிருந்​தனர். இருப்​பினும், அது இலங்கை ஆடு​களத்​தில் விளை​யாடும் அனுபவத்​துக்கு கைகொடுக்​கு​மா? என்​பது சந்​தேகமே.

அந்த வகை​யில் இன்று தொடங்​கும் பயிற்சி போட்​டி​யானது உள்ளூர் சூழ்​நிலைகளை இந்​திய அணி வீரர்​கள் தகவ​மைத்​துக்​கொள்ள உதவக்​கூடும். ஏனெனில், அணி​யில் இடம் பெற்​றுள்ள பல வீரர்​கள் முதன்​முறை​யாக இலங்கை மண்​ணில் டெஸ்ட் போட்டி​யில் விளை​யாட உள்​ளனர்.

இந்​திய அணி கடைசி​யாக 2017-ம் ஆண்டு இலங்கை மண்​ணில் டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி இருந்​தது. அந்​தத் தொடரில் விளை​யாடிய கே.எல்​.​ராகுல், குல்​தீப் யாதவ், ரவீந்​திர ஜடேஜா ஆகியோர் மட்​டுமே தற்​போதைய அணி​யிலும் உள்​ளனர்.

ஜஸ்​பிரீத் பும்ரா காயம் காரண​மாக விலகி உள்​ள​தால் வேகப்​பந்து வீச்சு துறையை முகமது சிராஜ் வழிநடத்​தக்​கூடும். பிரசித் கிருஷ்ணா, குர்​னூர் பிரார் ஆகியோர் உறு​துணை​யாக செயல்​படக்​கூடும். சுழற்​பந்து வீச்​சில் குல்​தீப் யாதவுடன் மானவ் சுதார், சரண்ஷ் ஜெயின் ஆகியோ​ரும் பலம் சேர்க்​கக்​கூடும்.

இந்​நிலை​யில், கொழும்பு நகரில் இன்று விட்​டு​விட்டு மழை பெய்யக்​கூடும் என வானிலை மையம் தெரி​வித்​துள்​ளது. இதனால் பயிற்சி போட்டி பாதிக்​கப்​படக்​கூடும். இலங்கை பிரதமர் லெவன் அணி சோனல் தினுஷா தலை​மை​யில் களமிறங்கு​கிறது.

அவர், இலங்கை அணிக்​காக 3 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி உள்​ளார். பிரதமர் லெவன் அணி​யில் வேகப்​பந்து வீச்சாளர்களான விஷ்வா பெர்​னாண்​டோ, லஹிரு குமரா மற்​றும் சுழற்​பந்து வீச்​சாளர்​களான இஷி​தா விஜேசுந்​த​ரா, ரமேஷ் மெண்டிஸ்​ ஆகியோரும்​ இடம்​பெற்​றுள்​ளனர்.

இலங்கை பிரதமர் லெவன் அணிக்கு எதிராக இன்று பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மோதல்
Redmi Note 17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in