

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி நோட் 17 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. சமயங்களில் ப்ரீமியம் போன்களையும் அறிமுகம் செய்கிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை இந்நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த வகையில் தற்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி நோட் 17 அறிமுகமாகி உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு சாப்ட்வேர் அப்டேட், ஆறு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.
ரெட்மி நோட் 17 சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>> 6.99 இன்ச் AMOLED டிஸ்பிளே
>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
>> ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 4 சிப்செட்
>> 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
>> 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள பிரதான கேமரா
>> 6, 8 ஜிபி ரேம்
>> 128 ஜிபி ஸ்டோரேஜ்
>> 8,000mAh பேட்டரி
>> 45 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
>> 22.5 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
>> 5ஜி நெட்வொர்க்
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> இந்த போனின் விலை ரூ.27,999 முதல் தொடங்குகிறது