இந்திய அணி எங்கு விளையாடினாலும் சவால் அளிக்கும்: சொல்கிறார் நியூஸிலாந்து பயிற்சியாளர் ராப் வால்டர்

இந்திய அணி எங்கு விளையாடினாலும் சவால் அளிக்கும்: சொல்கிறார் நியூஸிலாந்து பயிற்சியாளர் ராப் வால்டர்
Updated on: 
1 min read

வெலிங்டன்: இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட

டி 20 தொடரை 3-2 எனவும், ஒருநாள் போட்டித் தொடரை 3-1 எனவும் இந்திய அணி கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இரு போட்டிகளுக்கும் புற்கள் நிறைந்த வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் பயன்படுத்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நியூஸிலாந்து அணியின் பயிற்சியாளரான ராப் வால்டர் கூறியதாவது:

எந்த அணி இங்கு வந்து விளையாடுகிறது என்பது முக்கியம் அல்ல. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், சொந்த மண்ணில் நாங்கள் எவ்வாறு விளையாடப் போகிறோம், அதற்கான பயிற்சிகளை எப்படிச் சிறப்பாக மேற்கொள்வது என்பதில்தான் எங்கள் கவனம் உள்ளது. போட்டியில் சிறந்த முடிவைப் பெறுவதற்கும் வெற்றி பெறுவதற்கும் சாதகமான சூழலை உருவாக்கி, அதற்கேற்ப நாங்கள் தயாராக வேண்டும்.

அதேநேரத்தில், எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இந்திய அணி வலுவானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்த அணி எங்கு விளையாடினாலும் சவாலாக இருக்கும். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சமீபத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும், இதுபோன்ற பந்துவீச்சை எங்களது பேட்டிங் வரிசை ஏற்கெனவே பலமுறை எதிர்கொண்டுள்ளது.

எனவே, எதிரணி எந்த மாதிரியான சவாலைக் கொடுத்தாலும் அதைச் சமாளிக்கும் வகையில் நாங்கள் தயாராக இருக்க வேண்டும். எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்கும். அவ்வாறு விளையாடத் தவறினால் அதற்கு நாங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆடுகளத்தை எப்படி தயார் செய்ய வேண்டும் என நாங்கள் எந்தவித அறிவுரையும் கொடுக்கவில்லை. வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானம் கடந்த காலங்களில் சீரான தன்மையுடன் ஆடுகளங்களை வழங்கி வந்துள்ளது. எனவே, அதில் எந்த மாற்றத்தையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

வானிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியின்போது ஆடுகளத்தின் தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆடுகளம் முழுமையாகச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறும் என்று நான் கருதவில்லை.

நியூஸிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பொதுவாக எத்தகைய சூழல் நிலவும் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, பேட்டிங், பந்துவீச்சு இரண்டுக்கும் சமமான வாய்ப்பளிக்கும் ஆடுகளமாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய அணி எங்கு விளையாடினாலும் சவால் அளிக்கும்: சொல்கிறார் நியூஸிலாந்து பயிற்சியாளர் ராப் வால்டர்
குரு​வாயூர் ஏகாதசி உற்​சவம் இன்று தொடக்​கம்

X