குரு​வாயூர் ஏகாதசி உற்​சவம் இன்று தொடக்​கம்

குரு​வாயூர் ஏகாதசி உற்​சவம் இன்று தொடக்​கம்
Updated on: 
1 min read

சென்னை: குரு​வாயூர் ஸ்ரீ கிருஷ்​ணன் கோயி​லில் ‘குரு​வாயூர் ஏகாதசி’ உற்​சவம் இன்று தொடங்​கு​கிறது.

மலை​யாள ஆண்​டில் விருச்​சிக மாதம் (கார்த்​திகை) வளர்​பிறை ஏகாதசி திதி மிகவும் புனித​மானதாகக் கருதப்​படு​கிறது. புராணப்​படி அன்​றுதான் குருக் ஷேத்​திர போர்க்​களத்​தில் பகவான் ஸ்ரீ கிருஷ்​ணர் அர்​ஜுனனுக்கு மத் பகவத் கீதையை உப​தேசித்​தார் என்​பது ஐதீகம்.

அதேநாளில்தான் ஸ்ரீ மத் நாராயணீயம் இயற்​றிய மேல்​பத்​தூர் நாராயண பட்​டதி​ரிக்கு ஸ்ரீ குரு​வாயூரப்​பன் காட்சி கொடுத்தாகக் கூறப்​படு​கிறது. இதே நாளில் 1976-ல் குரு​வாயூர் கோயி​லின் தனித்​து​வம் பெற்ற ‘கேசவன்’ எனும் யானை இறைவன் திரு​வடியை அடைந்​தது. இதை​யொட்டி, கேரள மாநிலம் குரு​வாயூர் கிருஷ்​ணன் கோயி​லில் ஆண்​டுதோறும் ‘குரு​வாயூர் ஏகாதசி’ உற்​சவம் விமரிசையாக நடை​பெற்று வருகிறது.

இந்த ஆண்டு குரு​வாயூர் ஏகாதசி உற்​சவம் இன்று தொடங்குகிறது. தினமும் இர​வில் சொர்ண கோலத்​தில் ஸ்ரீ கிருஷ்ணர் எழுந்​தருளும் சிறப்பு சீவேலி புறப்​பாடும், நெய் விளக்கு ஏற்​றமும் நடை​பெறும். 21-ம் தேதி ஏகாதசி தினத்​தில் சிறப்பு பூஜை, சடங்​குகள், அலங்​காரம் நடை​பெறும்.

மறுநாள் 22-ம் தேதி துவாதசி திதி​யில் ‘துவாதசி அர்ப்​பணம்’ நிகழ்வு நடை​பெறும். மேற்​படி பூஜைகள், சடங்​கு​கள் யாவும் கோயிலின் தந்​திரி பி.சி.தினேசன் நம்​பூதி​ரிபாட், மேல்​சாந்தி பி.எம்.சதீசன் வழிகாட்​டுதல்​படி நடக்​கும். ஏகாதசி உற்​சவத்​தை​யொட்டி குரு​வாயூருக்கு வரும் பக்​தர்​களுக்​குத் தேவை​யான ஏற்​பாடுகளை தேவஸ்தான கமிட்டி தலை​வர் ஏ.வி.கோபிநாத் தலை​மையி​லான கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

குரு​வாயூர் ஏகாதசி உற்​சவம் இன்று தொடக்​கம்
சோனியா காந்தி சுயசரிதை புத்தகம் வெளியீடு: தமிழக முதல்வர் விஜய் உட்பட 7 மாநில முதல்வர்கள் பங்கேற்பு

X