

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்திய டி20 அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான அணிகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாட உள்ளன. வரும் 22 முதல் நவ.1-ம் தேதி வரை டி20 தொடரும், நவ.4 முதல் நவ.15 வரை ஒருநாள் தொடரும், நவ.19 முதல் டிச.1 வரை டெஸ்ட் தொடரும் நடைபெறுகிறது.
ஒருநாள் தொடருக்கான அணியில் ஜடேஜாவுக்கு இடம் கிடைக்கவில்லை. குமார் குஷாக்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அகிப் நபியும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி
ஷுப்மன் கில் (கேப்டன்), ஷ்ரேயஸ் ஐயர் (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், நமன் திர், அன்ஷுல் காம்போஜ், குர்நூர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.
4 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி
ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், நமன் திர், அகிப் நபி, குர்நூர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), முகமது சிராஜ், யஷ் தாக்குர், குல்தீப் யாதவ்.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி
ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரேல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திரா ஜடேஜா, அன்ஷுல் காம்போஜ், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சிராஜ்.