ஜனவரி 31 வரை போராட்டங்களைத் தள்ளிவைக்க டெல்லி வணிகர்கள் வலியுறுத்தல்

பிரதமர் மோடி, ராகுலுக்கு கடிதம்
ஜனவரி 31 வரை போராட்டங்களைத் தள்ளிவைக்க டெல்லி வணிகர்கள் வலியுறுத்தல்
Updated on: 
2 min read

புதுடெல்லி: எதிர்வரும் பண்டிகை காலம் மற்றும் திருமண முகூர்த்த நாட்களை சுட்டிக்காட்டி ஜனவரி 31, 2027 வரையில் அரசியல் கட்சிகள் தங்களது போராட்டங்களைத் தலைநகர் டெல்லியில் தள்ளிவைக்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த வணிகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு வணிகர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​கக் கோரி எதிர்க்​கட்​சிகள் நாடு முழுவதும் பல்​வேறு போராட்​டங்​களை நடத்தி வரு​கின்​றன. தலைநகர் டெல்லியில் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் மெட்ரோ ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இதன் காரணமாக டெல்லியில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அண்மைய டெல்லி போராட்டத்தால் மட்டும் வர்த்தகர்களுக்கு சுமார் ரூ.2,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக டெல்லியில் உள்ள வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

இன்று (வெள்ளிக்கிழமை) கூட சிஜேபி சார்பில் ‘மூவர்ணக் கொடி’ போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனாலும் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாரதிய உத்யோக் வணிகர் மண்டல் (பியுவிஎம்) என்ற அமைப்பு சார்பில் போராட்டத்தை தள்ளிவைக்குமாறு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதில் அவர்கள் கூறியுள்ளதாவது: வரும் நாட்களில் நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் திருமண முகூர்த்த நாட்கள் வரவுள்ளது. இது வணிகர்கள், தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. இதை நம்பி பல்வேறு குடும்பங்கள் உள்ளன. போக்குவரத்து துறையும் இதன் மூலம் பலன் பெறும். தொடர் போராட்டம், போக்குவரத்து கட்டுப்பாடு, சாலைகளில் தர்ணா உள்ளிட்ட காரணங்களால் தங்களது தொழில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

நுகர்வோர் சந்தைகளுக்கு வருவதில் இடையூறு, பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல், வணிக இயக்கத்தில் தடை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த போராட்டத்தால் கோடி கணக்கான ரூபாய் இழப்பு வணிகர்களுக்கு ஏற்படுகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் பத்து லட்சம் வணிக நிறுவனங்கள் உள்ளன. இதோடு சேர்ந்து ஆயிர கணக்கான அங்காடிகள் மற்றும் தற்காலிக கடைகளும் உள்ளன. அதனால் தலைநகர் டெல்லியின் வணிகத்தில் பாதிப்பு ஏற்பாட்டால் அது நாடு முழுவதும் எதிரொலிக்கும். இதன் தாக்கம் பொருளாதாரத்தையும் பாதிக்க செய்யும். பண்டிகை கால வியாபாரத்தை எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபடும் கட்சிகளுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடியிடம் வணிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதே போல காங்கிரஸ் கட்சியின் ராகுல் மற்றும் ஆம் ஆத்மியின் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் போராடும் உங்களது ஜனநாயக உரிமையை நாங்கள் மதிக்கிறோம். இருப்பினும் இந்த போராட்டத்தை ஜனவரி 31 வரை தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், டெல்லியில் போராடுவாதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் ஜனவரி 31-க்கு பிறகு போராட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஜனவரி 31 வரை போராட்டங்களைத் தள்ளிவைக்க டெல்லி வணிகர்கள் வலியுறுத்தல்
சிஜேபி போராட்டம்: அபிஜீத், நேஹா கைதுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in