44-வது முறையாக 200 ரன்கள் வேட்டையாடிய இந்திய அணி!

44-வது முறையாக 200 ரன்கள் வேட்டையாடிய இந்திய அணி!
Updated on
1 min read

நாக்பூர்: இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் இடையி​லான 5 ஆட்டங்​கள் கொண்ட டி20 கிரிக்​கெட் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நேற்று நடை​பெற்​றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி​யின் கேப்​டன் மிட்​செல் சாண்ட்​னர் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 238 ரன்​கள் குவித்​தது.

தனது 7-வது அரை சதத்தை கடந்த அபிஷேக் சர்மா 35 பந்துகளில், 8 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 84 ரன்​கள் விளாசி​னார். கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் 22 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 32 ரன்​களும், ஹர்​திக் பாண்​டியா 16 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3பவுண்​டரி​களு​டன் 25 ரன்​களும் சேர்த்​தனர்.

இறு​திக்​கட்ட ஓவர்​களில் ரிங்கு சிங் அதிரடி​யாக விளையாடி 20 பந்துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்​கள் விளாசி​னார். சஞ்சு சாம்​சன் 10, இஷான் கிஷன் 8, ஷிவம் துபே 9, அக்​சர் படேல் 5 ரன்களில் நடையை கட்​டினர்.

சர்​வ​தேச டி20 கிரிக்​கெட்​டில் இந்​திய அணி 200 ரன்​களுக்கு மேல் குவிப்​பது இது 44-வது முறை​யாகும். நியூஸிலாந்​துக்கு எதி​ராக மட்டும் 5-வது முறை​யாக 200 ரன்​களுக்கு மேல் வேட்​டை​யாடி உள்ளது.

239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. முதல் இரண்டு ஓவர்களில் கான்வே (0) மற்றும் ரச்சின் ரவீந்திரா (1) ஆட்டமிழந்தனர். கிளென் பிலிப்ஸ் 78 மற்றும் மார்க் சாப்மேன் 39 ரன்கள் எடுத்தனர். மிட்செல் 28, ராபின்சன் 21 மற்றும் சான்ட்னர் 20 ரன்கள் எடுத்தனர்.

அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 48 ரன்களில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் வருண் மற்றும் ஷிவம் துபே தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் தாள் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை அபிஷேக் சர்மா வென்றார்.

44-வது முறையாக 200 ரன்கள் வேட்டையாடிய இந்திய அணி!
Single Salma: தன்னை அறியும் சல்மா உடைத்த ‘சமூகச் சடங்கு’ | திரை தேவதைகள் 01

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in