நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20: திலக் வர்மா அதிரடியில் இந்தியா வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20: திலக் வர்மா  அதிரடியில் இந்தியா வெற்றி
Updated on: 
2 min read

கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்​டி​யில் இந்​திய அணி 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

கிறைஸ்ட்​சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் டாஸ் வென்ற இந்​திய அணி பீல்​டிங்கை தேர்வு செய்​தது. இந்​திய அணி​யில் காயம் அடைந்த இஷான் கிஷனுக்கு பதிலாக வைபவ் சூர்​ய​வன்ஷி சேர்க்​கப்​பட்​டார். மேலும் மயங்க் யாதவ் நீக்​கப்​பட்டு பிரின்ஸ் யாதவ் களமிறக்​கப்​பட்​டார்.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 180 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக கிளென் பிலிப்ஸ் 43 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 70 ரன்​களும், பெவன் ஜேக்​கப்ஸ் 46 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 58 ரன்​களும் விளாசினர்.

இந்​திய அணி தரப்​பில் அர்​ஷ்​தீப் சிங் 2 விக்​கெட்​களை வீழ்த்தினார். புவனேஷ்​வர் குமார், பிரின்ஸ் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். 181 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​திய அணி ஒரு கட்​டத்​தில் 10.5 ஓவர்களில் 70 ரன்​களுக்கு 5 விக்​கெட்​களை இழந்து நெருக்​கடியை சந்​தித்​தது. சஞ்சு சாம்​சன் 17 பந்​துகளில், ஒரு பவுண்​டரி, ஒரு சிக்ஸருடன் 14 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜேக்​கப் டஃபி பந்​திலும், அபிஷேக் சர்மா 21 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 27 ரன்​கள் எடுத்த நிலை​யில் மிட்​செல் சாண்ட்​னர் பந்​திலும் ஆட்​ட​மிழந்​தனர்.

மிகவும் எதிர்​பார்க்​கப்​பட்ட வைபவ் சூர்​ய​வன்ஷி 8 பந்​துகளில், 4 ரன்​கள் எடுத்த நிலை​யில் நேதன் ஸ்​மித் பந்​தில் எளிதாக விக்​கெட்டை பறிகொடுத்​தார். கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் 11 பந்​துகளில் 7 ரன்​கள் எடுத்த நிலை​யில் மிட்​செல் சாண்ட்​னர் பந்​தில் போல்​டானார். அக்​சர் படேல் 9 பந்​துகளில் 11 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆட்​ட​மிழந்​தார்.

இந்த 2 விக்​கெட்​களை​யும் சாண்ட்​னர் ஒரே ஓவரில் வீழ்த்​தி​யது இந்​திய அணிக்கு நெருக்​கடியை உரு​வாக்​கியது. இதையடுத்து திலக் வர்​மாவுடன் இணைந்த நமன் திர் மட்​டையை சுழற்​றினார். அதிரடி​யாக விளை​யாடிய நமன் திர் 17 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரியுடன் 31 ரன்​கள் எடுத்த நிலை​யில் சாண்ட்​னர் பந்​தில், கிளென் பிலிப்​ஸிடம் எக்ஸ்டிரா கவர் திசையில் எளிதாக கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

கடைசி 12 பந்​துகளில் 29 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் நேதன் ஸ்​மித் வீசிய 19-வது ஓவரில் 18 ரன்​கள் கிடைத்தது. ஜேக்​கப் டஃபி வீசிய கடைசி ஓவரில் இந்​திய அணி​யின் வெற்​றிக்கு 11 ரன்​கள் தேவைப்​பட்​டது.

முடி​வில் இந்​திய அணி 19.5 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 181 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. திலக் வர்மா 26 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 6 பவுண்​டரி​களு​டன் 51 ரன்​களும், நிதிஷ் குமார் ரெட்டி 13 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரியுடன் 26 ரன்​களும் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். ஆட்ட நாயக​னாக திலக் வர்மா தேர்​வானார்.

5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 3-வது ஆட்டம் வரும் 27-ம் தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது.

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20: திலக் வர்மா  அதிரடியில் இந்தியா வெற்றி
கேம்பிரிட்ஜ் கிரேக்க உணவகத்தில் மலர்ந்த காதல்: ராஜீவ் காந்தியுடனான முதல் சந்திப்பை நினைவுகூர்ந்த சோனியா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in