கேம்பிரிட்ஜ் கிரேக்க உணவகத்தில் மலர்ந்த காதல்: ராஜீவ் காந்தியுடனான முதல் சந்திப்பை நினைவுகூர்ந்த சோனியா

கேம்பிரிட்ஜ் கிரேக்க உணவகத்தில் மலர்ந்த காதல்: ராஜீவ் காந்தியுடனான முதல் சந்திப்பை நினைவுகூர்ந்த சோனியா
Updated on: 
1 min read

புதுடெல்லி: 1960-களின் மத்​தி​யில் கேம்​பி​ரிட்ஜ் நகரில் உள்ள ஒரு சிறிய கிரேக்க உணவகத்​தில் ராஜீவ்காந்​தி​யைத் தற்​செய​லாகச் சந்​தித்​ததையும், முதல் பார்​வை​யிலேயே அவர்​மீது ஈர்ப்பு ஏற்​பட்​டதையும் சோனியா காந்தி நினைவு கூர்ந்​துள்​ளார்.

அவரது புத்​தக​மான ‘பிலாங்​கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) நவம்​பர் 10-ம் தேதி வெளியாகிறது.

புத்​தகத்​தின் முன்​னோட்ட வீடியோவை தனது எக்ஸ் தளத்​தில் பகிர்ந்​துள்ள சோனியா, “ராஜீவும் நானும் அன்பு, மகிழ்ச்சி, நினைவு​கள் நிறைந்த ஓர் உல​கத்தை உரு​வாக்​கினோம். நவம்​பர் 10 அன்று அந்த உல​கத்தை உங்​களு​டன் பகிர்ந்து கொள்​கிறேன்” என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

இந்​தியா உள்​ளிட்ட பல நாடுகளின் மாணவர்​கள் அதி​கம் கூடும் ‘வார்​சிட்டி’ (Varsity) உணவகத்​தில், பொது நண்​பர் ஒரு​வர் மூலம் இரு​வரும் அறி​முக​மாயினர்.

அப்​போது இங்​கிலாந்​தில், குறிப்​பாகத் தனக்​குப் பழக்​க​மான இத்​தாலிய உணவு போன்​றவை கிடைக்​கும் இடங்​களை சோனியா தேடிக்​கொண்​டிருந்​தார். “அந்​தக் காலத்​தில் இங்​கிலாந்​தில் உணவு மோச​மாக இருக்​கும். இப்​போதுபோல் அதிக உணவகங்​கள் அப்​போது இல்லை” என்​கிறார் அவர்.

ஆனால் அந்​தச் சந்​திப்பு, உணவுத் தேடலைத் தாண்டி வாழ்​நாள் முழு​வதும் நினைவில் நிற்​கும் ஒன்​றாக மாறியது.

“அவரை முதன்​முதலில் சந்​தித்​த​போதே, இவருடன் இருக்க வேண்​டும் என்று எனக்கு உடனடி​யாகத் தோன்​றியது. பின்​னர், அவருக்​கும் அதே உணர்​வுதான் என்​பதை அறிந்​தேன்” என்​கிறார் சோனியா.

ராஜீவின் தோற்​றத்​தைவிட அவரது மென்​மையான இயல்பே தன்​னைக் கவர்ந்​த​தாகவும் அவர் கூறுகிறார். “மிகவும் மென்​மையான தோற்​றம் கொண்​ட​வர். நிச்​சய​மாக மிக அழகானவரும்​கூட. ஆனால் அந்த மென்​மைதான் வெளிப்​பட்டு என் மனதைத் தொட்​டது” என்று அவர் நினைவு​கூர்​கிறார்.

இரு​வரின் உறவும் நட்​பாகவே தொடங்​கியது. விருந்​துகள், சுற்​றுலா இடங்​களுக்​குச் சென்ற பயணங்​கள் என மாணவ வாழ்க்​கை​யின் அன்​றாட அனுபவங்​களை இரு​வரும் பகிர்ந்​து​கொண்​டனர். சக மாணவர்​களு​டன் காதலர் தின விருந்​தில் கலந்​து​கொண்​டதையும் சோனியா குறிப்​பிடு​கிறார். அரசி​யல் புகழுக்கு முந்​தைய அந்த எளிய இளமைக் கால நினைவு​களை​யும், பழைய புகைப்​படங்​களை​யும் அந்த வீடியோ அழகாக நினைவு கூர்​கிறது.

இரு​வரும் 1968-ல் திரு​மணம் செய்து​கொண்​டனர். ராஜீவ் காந்தி 1984 முதல் 1989 வரை இந்​தி​யப் பிரதம​ராகப் பதவி வகித்​தார். 1991 மே மாதம் தமிழ்​நாட்​டில் தேர்​தல் பிரசா​ரத்​தின்​போது படுகொலை செய்​யப்​பட்​டார்.

இத்​தாலி​யில் பிறந்த சோனியா, காங்​கிரஸ் கட்​சி​யின் மிக முக்​கியத் தலை​வர்​களில் ஒரு​வ​ராக உயர்ந்​தவர். சில நாள்​களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமிலும் இணைந்த அவர், அங்​கும் தனது நூல் குறித்​துப் பகிர்ந்​துள்​ளார்.

கேம்பிரிட்ஜ் கிரேக்க உணவகத்தில் மலர்ந்த காதல்: ராஜீவ் காந்தியுடனான முதல் சந்திப்பை நினைவுகூர்ந்த சோனியா
ஆந்​திராவில் லாரியில் வெடிபொருட்கள் வெடித்து 7 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in