டாடா ஸ்டீல் மாஸ்​டர்ஸ் செஸ்: அர்ஜுன் எரி​கைசி வெற்றி

டாடா ஸ்டீல் மாஸ்​டர்ஸ் செஸ்: அர்ஜுன் எரி​கைசி வெற்றி
Updated on
1 min read

விஜ் ஆன் ஜீ(நெதர்​லாந்​து): டாடா ஸ்டீல் மாஸ்​டர்ஸ் செஸ் போட்​டி​யின் முதல் சுற்​றில் இந்​திய கிராண்ட்மாஸ்டர் அர்​ஜுன் எரிகைசி வெற்றி பெற்​றார்.

நெதர்​லாந்​தின் விஜ் ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நேற்று தொடங்​கியது. முதல் சுற்றில் இந்​திய கிராண்ட்​மாஸ்​டர் ஆர். பிரக்​ஞானந்​தாவை எதிர்த்து அர்​ஜுன் எரி​கைசி விளை​யாடி​னார். 32-வது நகர்த்​தலில் அர்​ஜுன் எரி​கைசி வெற்றி பெற்​றார்.

மற்​றொரு போட்​டி​யில் உலக சாம்​பியனும், இந்​திய கிராண்ட்​மாஸ்​டரு​மான டி.கு​கேஷும், உஸ்​பெகிஸ்​தான் வீரர் ஜவோகிர் சிந்​தரோ​வும் மோதினர். 78 நகர்த்​தல்​களில் இந்த ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. முதல் சுற்​றின் முடிவில் இந்​தி​யா​வின் அர்​ஜுன் எரி​கைசி, ஜெர்​மனி வீரர் வின்​சென்ட் கீமர், அமெரிக்​கா​வின் ஹன்ஸ் மோக் நீமேன் ஆகியோர் தலா ஒரு புள்​ளி​களு​டன் முன்​னிலை​யில் உள்ளனர்.

டி.கு​கேஷ், இந்​திய கிராண்ட்​மாஸ்​டர் அரவிந்த் சிதம்​பரம், ஜெர்​மனி​யின் மத்​தி​யாஸ் புளூ​பாப், நெதர்லாந்தின் ஜோர்​டன் வான் பாரஸ்ட், செக் குடியரசின் தாய் டேய் வான் குயுடன், துருக்​கி​யின் யாகி கான் எர்டோக்​மஸ், உஸ்​பெகிஸ்​தானின் நோடிர்​பெக் அப்​துசத்​தோரோவ் ஆகியோர் 0.5 புள்​ளி​களு​டன் உள்​ளனர்.

டாடா ஸ்டீல் மாஸ்​டர்ஸ் செஸ்: அர்ஜுன் எரி​கைசி வெற்றி
அதிமுக வாக்குறுதிகளை எப்படி நம்ப முடியும்? - கேட்கிறார் வீரபாண்டியன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in